நாட்டுப் பண்ணை அவமதித்துவிட்டார் ஆளுநர் ரவி சட்டசபைக்கு வெளியே அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

நாட்டுப் பண்ணை அவமதித்துவிட்டார் ஆளுநர் ரவி சட்டசபைக்கு வெளியே அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை,ஜன.10- சமூக நீதி, சமத்துவம், பெண் அடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி இந்த வார்த்தைகளை எல்லாம் ஆளுநர் தவிர்த்து இருக் கிறார் என்றும், அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்து சென்றிருக்கிறார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி யுள்ளார்.

தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என்.ரவி முழுமையாக படிக்க வில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதை யடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டா லின் பேசுகையில், "சட்டசபை விதிகளின் படி அரசு தயாரித்து கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அது விதி மீறல். ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.

இதையடுத்து ஆளுநர் படித்த உரை, வாக்கெடுப்பு மூலம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவைக் குறிப்பில் இடம் பெற்றது. அந்த உரை அவை குறிப் பில் சேர்க்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த உரையை நிகழ்த் தும் போது ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் அவையில் இருந்தே வெளியேறினார். இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தேசிய கீதத்துக்கும் ஆளுநர் மரி யாதை அளிக்கவில்லை என்று கூறினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

விதிகளுக்கு மாறாக ஆளுநர் செயல்பாடுகளில் நாங்கள் மாறு பட்ட கருத்தை கொண்டிருந்தாலும் ஆளுநர் உரையை துவங்கும் போது எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக் காமல் அமைதி காத்து ஆளுநருக்கு உரிய மரியாதையை அரசின் சார்பாக நாங்கள் அளித்தோம். ஆனால் ஆளுநர் தனது உரையை வாசிக்கிற போது இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நடைமுறைகளுக்கு மாறாக சட்ட விதிகளுக்கு மாறாக அவற்றை மீறக் கூடிய வகையில் ஆளுநர் இன்று தனது உரையை வாசித்து இருக் கிறார். இது மிகுந்த வருத்தத்திற்கு உரிய ஒன்று என்றுதான் நம்முடைய முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை கொண்டு வரக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

ஆளுநர் அவையில் பேச வேண் டிய உரையின் வரைவு ஏற்கனவே அவருக்கு அனுப்பப்பட்டு இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்து இருக்கிறார். கடந்த 5 ஆம் தேதியே இந்த வரைவு ஆளுநருக்கு அனுப் பப்பட்டு அதை 7 ஆம் தேதி ஆளு நரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இதற்கான ஆதாரம் உள்ளது. ஆளுநர் முழுமையாக ஒப்புதல் அளித்த பிறகு இன்றைக்கு அவைக்கு வந்து ஆளுநர் படித்து இருக்கக் கூடிய உரை என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. காரணம் அரசு கொடுத்த உரையில் இருந்து மாறுபட்டு செல்கிறார் என்பது மட்டும் அல்ல.

அம்பேத்கர் பெயரை வாசிக்க வில்லை தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கி வைத்திருக்க கூடிய தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத் கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்து சென்றிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மட்டும் இல்லை. சமூக நீதி, சமத்துவம், பெண் அடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி இந்த வார்த்தைகளை எல் லாம் ஆளுநர் தவிர்த்து இருக்கிறார்.

நாட்டுப் பண்ணிற்குக்கூட

ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் உரையை வைக்கும்போது அதை அவர் அப்படியே படிக்கிறார். ஆனால் ஆளுநர் அந்த உரையை விடுத்து அவராகவே சில வார்த்தை களை புதிதாக சேர்த்து செல்வது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. அதிலும் குறிப்பாக நாட்டு பண் ணிற்குக்கூட உரிய மரியாதை தராமால் முதலமைச்சர் பேசுகிற போதே  நாட்டுப் பண்  போடுவ தற்கு முன்பாக.. அதற்கு கூட இருக் காமல் ஆளுநர் வெளியே சென்றிருப் பது இழுக்காக கருதுகிறோம்.

அநாகரீகமான செயல்

அதேபோல அதிமுகவும் அதற்கு முன்பாக அவையில் இருந்து வெளியே சென்று இருக்கிறார்கள். தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பாக அதிமுக வெளியேறி இருப்பதுதான் அவர்கள் செய்த மிக அநாகரீகமான செயல் என்பதை சொல்ல விரும்புகிறேன். சனாதன கொள்கைகளை வெளியில் பேசலாம்..சொந்த விருப்பு வெறுப் புகளை அவைக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. அதிமுகவை பொறுத்தவரை அண்ணாவால் உரு வாக்கப்பட்ட தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு மாறாக ஒரு பதத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை கண்டிப்பதற்கு வக்கோ.. வகையோ.. திராணியோ இல்லாமல் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்து விட்டு இன்று அதிமுகவினர் வெளியே சென்று இருப்பது வெட்கக்கேடானது.


No comments:

Post a Comment