கடந்த 8 ஆண்டுகளில் செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு ரூ.1,487.9 கோடியாம் தமிழ் மொழிக்கு வெறும் ரூ. 74.1 கோடிதானாம் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சம் - அநீதி: அதிர்ச்சித் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

கடந்த 8 ஆண்டுகளில் செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு ரூ.1,487.9 கோடியாம் தமிழ் மொழிக்கு வெறும் ரூ. 74.1 கோடிதானாம் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சம் - அநீதி: அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, ஜன.4- ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சிகளில் 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவ ணையில் 1. அசாமிஸ், 2. பெங்காலி, 3. குஜராத்தி, 4. ஹிந்தி, 5. கன்னடம், 6. காஷ் மீரி, 7. கொங்கணி, 8. மலையாளம், 9. மணிப்பூரி, 10. மராத்தி, 11. நேபாளி, 12. ஒரியா, 13. பஞ்சாபி, 14. சமஸ்கிருதம், 15.சிந்தி, 16. தமிழ், 17. தெலுங்கு, 18. உருது, 19. போடோ, 20. சந் தாலி, 21. மைதிலி, 22. டோக்ரி என மொத்தம் 22 மொழிகள், அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக இடம் பெற்றுள்ள நிலையில், ஹிந்தி, சமஸ்கிருத வளர்ச் சிக்கு மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொட்டி வருகிறது. ஏனைய மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தா லும், நரேந்திர மோடி அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதாக இல்லை. 

இந்நிலையில்தான், கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ. 1,487.9 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ. 74.1 கோடியும் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

செம்மொழிகளான தமிழ், சமஸ்கிருத வளர்ச் சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நட வடிக்கைகள் குறித்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு, ஒன்றிய அரசின் கல்வித்துறை இணையமைச் சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

ஆண்டு தமிழ்          சமஸ்கிருதம் 

2014-2015 ரூ.8.27 ரூ. 125.80

2015-2016 ரூ. 11.99 ரூ. 161.47

2016-2017 ரூ. 5.10 ரூ. 149.19

2017-2018 ரூ. 10.67 ரூ. 198.31

2018-2019 ரூ. 4.65 ரூ. 214.37

2019-2020 ரூ. 9.80 ரூ. 246.99

2020-2021 ரூ. 11.73 192.85

2021-2022 ரூ. 11.86 198.83

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த கடந்த கல்வியாண்டு 2014-2015 முதல் 2021-  2022 கல்வியாண்டு வரை மத்திய செம் மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கிய நிதி விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில், கடந்த 2014 ஆண்டு முதல் மத்திய செம் மொழி தமிழாய்வு நிறுவனத் திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு ரூ. 74.1 கோடி மட் டுமே நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதும், அதேநேரத்தில், மத்திய சமஸ்கிருத பல்க லைக்கழகத்திற்கு ரூ.1,487.9 கோடியை வாரிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.

கடந்த 8 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய ஒட்டு மொத்த தொகையானது, சமஸ்கிருத வளர்ச்சிக்கு மோடி அரசு ஓராண்டில் ஒதுக்கிய நிதியை விட குறைவாகும். குறிப்பாக 2019-2020இல் தமிழ் வளர்ச்சிக்காக மோடி அரசு ஒதுக்கியது வெறும் ரூ.10 கோடி. ஆனால், அதே ஆண்டில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ. 247 கோடி தூக்கிக் கொடுக் கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் அதிகாரப் பூர்வக் கணக்கெடுப்பின்படி 6 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 881 பேர் தமிழ் மொழி பேசுவோராக உள்ள னர். இது 11 ஆண்டுகளுக்கு முந்தைய 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஆகும். தற் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக் கும். இந்தியா தவிர உலகம் முழுவதும் 30 நாடுகளில் தமிழ்பேசும் மக்கள் உள்ளனர்.

ஆனால், அதே 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் சமஸ்கிரு தம் பேசுவோர் எண்ணிக்கை லட்சத்தில் கூட இல்லை. 24 ஆயிரத்து 821 பேர் மட் டுமே சமஸ்கிருதம் பேசுவோராக உள்ளனர். 

இவ்வாறு நடை முறையில் பேசப்படாத சாஸ்திர சடங்குகள் தவிர வேறெங்கும் புழக்கத்தில் இல்லாத ஒரு மொழிக்கு, பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து சுமார் 1500 கோடி ரூபாயை மோடி அரசு கொட்டி அழுதுள்ளது. 

இது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. மோடி அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment