பிஜேபி ஆட்சியின் சாதனையோ சாதனை! அரசின் பற்றாக்குறை 50 சதவீதத்தை எட்டியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

பிஜேபி ஆட்சியின் சாதனையோ சாதனை! அரசின் பற்றாக்குறை 50 சதவீதத்தை எட்டியது

புதுடில்லி, ஜன.3 2022-ஆம் ஆண்டில் டாலருக்கு இணையான இந்திய  ரூபாய் மதிப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2021 இறுதியில் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 74 ரூபாய் 33 காசு களாக இருந்த நிலையில், தற்போது 82 ரூபாய் 74 காசுகளாக சரிந்துள் ளது. 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2022-ஆம்  ஆண்டில்தான், ரூபாய் மதிப்பு, ஒரே ஆண்டில் 10 சதவிகி தத்திற்கு மேலாக சரிந்துள்ளது.

கடந்த நவம்பர் வரையில் ஒன் றிய அரசின் நிதிப்  பற்றாக்குறையா னது, நிர்ண யிக்கப்பட்ட இலக்கில் 59 சதவிகிதம் அளவைத் தொட் டுள்ளது. அரசின் வருவாய்க்கும் செலவினத்துக்கும் உள்ள இடை வெளியே நிதிப்  பற்றாக்குறை எனப்படுகிறது. அந்த வகையில், கடன் வாங்குவதன் மூலம் இந்த நிதிப் பற்றாக்குறையை ஒன்  றிய அரசு சமாளிக்கும். அந்த  வகையில், நடப்பு 2022_-2023-ஆம் நிதியாண்டில் ரூ. 16  லட்சத்து 61 ஆயிரம் கோடி  அளவிற்கு நிதிப்பற்றாக் குறை இருக்கும் என்று 2022  பிப்ரவரியில் தாக்கல் செய் யப்பட்ட பட்ஜெட் டில் ஒன்றிய அரசு கணிப்பு வெளி யிட்டிருந்தது. இந்த நிதிப் பற்றாக் குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (நிஞிறி) 6.4 சதவிகிதம் ஆகும். 

இந்நிலையில், நடப்பு நிதி யாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8  மாதங்களில் மட்டும் அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ. 9  லட்சத்து 78 ஆயிரம் கோடி களைத் தொட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் எதிர்  பார்க்கப்பட்ட நிதிப்பற்றாக் குறை இலக்கில் 59 சதவிகி தம் ஆகும். கடந்த நிதி யாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது, ஒட்டு மொத்த இலக்கில் 46.2 சத விகிதமாக இருந்த நிலை யில், நடப்பாண்டில் அது 13 சதவிகிதம் வரை அதிகரித்  துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அரசின் மூலதன  செலவினம் அதிகரித்த தோடு வரி அல்லாத வரு வாய் குறைந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள் ளதாகவும் அரசு தெரி வித்துள்ளது. அதாவது, கணக்கு  கட்டுப்பாட்டு இயக்குநரக (சிஜிஏ) தரவுகளின்படி, நடப்பு நிதியாண் டின் நவம்பர் வரை  நிகர வரி வருவாய் ரூ. 12 லட்  சத்து 24 ஆயிரம் கோடி  ஆகும். இது நிர்ணயிக்கப் பட்ட இலக்கில் 63.3 சதவிகிதம் மட்டுமே ஆகும். இதுவே  கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தில்- நிகர வரி  வருவாயானது 73.5 சதவிகித இலக்கை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஏப்ரல் முதல் நவம்பர்  வரை, வரி அல்லாத வரு வாய் ரூ. 1.98 லட்சம் கோடி யாக (73.5 சதவிகிதம்) உள்  ளது. இதுவும் கடந்த ஆண்டை விடக் குறைந்துள் ளது. கடந்த நிதி யாண்டில் வரி அல்லாத வருவாய் 91.8 சதவிகிதமாக இருந்தது.  கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஒன்றிய அரசின் மொத்த செலவினம் எதிர்பார்க்கப்பட்ட தொகையில் 59.6 சதவிகிதமாக இருந்தது. ஆனால், நடப்பாண்டின் இதே கால கட்டத்தில் செலவினம் 61.9 சதவிகிதமாக அதிகரித்துள் ளது. இந்த காலகட்டத்தில் அரசின் மூலதன செலவினமும் 49.4 சதவி கிதத்தில் இருந்து 59.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வருவாய் நவம்பர் வரை  ரூ. 14 லட்சத்து 64 ஆயிரம்  கோடியாக (64 சதவிகிதம்) உள்ளது. இதுவே கடந்த ஆண்டின் இதே காலகட்டத் தில் 69.8 சதவிகிதமாக இருந்தது.  இதனிடையே, வரும் மாதங்களில் அரசின் வருவாய் மேலும் அதிகரிக் கும் என்பதால், நிதிப் பற்றாக் குறை நிர்ணயிக்கப்பட்ட 6.4 சதவிகித இலக்கை விட  அதிகரிக்காது என்ற நம்பிக் கையில் அரசு உள்ளது.


No comments:

Post a Comment