சென்னையில் 38 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

சென்னையில் 38 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்

சென்னை, ஜன.6 சென்னை மாவட்டத் தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 09-11-2022 அன்று வெளியிடப்பட்டது. 1.1.2023 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து 9.11.2022 முதல் 8.12.2022 வரை மனுக்கள் பெறப்பட்டன.  

 ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று (5.1.2023) வெளியிட்டார். இதன்படி சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38,92,457. இதில், ஆண் வாக்காளர் எண்ணிக்கை 19,15,611.பெண் வாக்காளர் எண்ணிக்கை 19,75,788. மற்றவர்கள் 1,058. இந்த வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலங்கள், வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட் டுள்ளன. இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 32,579. இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,70,125 வாக் காளர்களும், அதிக பட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,07,831 வாக்காளர்களும் உள்ளனர்.

ஜன.10-இல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

 அரசு தலைமை கொறடா அறிவிப்பு

சென்னை, ஜன.6 வரும் 10-ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 10.01.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள் ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 

9-ஆம் தேதி ஆளுநர் ஆர். என்.ரவியின் உரையுடன் தொடங்கப்பட வுள்ளது. முன்னதாக, நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருந்தது


No comments:

Post a Comment