பிளஸ்2 மாணவர்களுக்கு இமெயில் கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

பிளஸ்2 மாணவர்களுக்கு இமெயில் கட்டாயம்

 சென்னை, ஜன.8 பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத் திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இளம் பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 

2022-2023ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர் களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக் கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண் ணப்பிக்க முடியும். இதனால், கல்லூரிகள் கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்கள் இமெயில் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன.

ஒவ்வொரு மாணவருக்கும் 'இமெயில்' இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த ஆண்டு பிளஸ்-2 பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் இமெயிலை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்க அனைத்து அரசு தலைமையா சிரியர்களும் வழிகாட்டிட வேண்டும். மேலும், அவ்வாறு இமெயில் தொடங்கும் போது பின்வரும் கூடுதல் விவரங்களையும் வழங்குதல் வேண்டும். இமெயிலை உருவாக்கிய பின் மாணவர்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு இமெயில் அனுப்புவது, வந்த இமெயிலை எவ்வாறு திறந்து படிப்பது மற்றும் இமெயிலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாண வர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பிக்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படும் 'இமெயில் பாஸ்வேர்ட்' மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். மற்றவர்களுக்கு பகிரக் கூடாது. இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் இமெயிலை தவறாக பயன்படுத் துவதை தவிர்க்கலாம் என்ற விவரங்களை மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.  


No comments:

Post a Comment