14 உலகங்கள் இருக்கின்றனவாம்! கண்டுபிடித்த கொலம்பஸ் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

14 உலகங்கள் இருக்கின்றனவாம்! கண்டுபிடித்த கொலம்பஸ் யார்?

ஓர் ஆன்மிக இதழ், 14 உலகங்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

பதினான்கு உலகங்கள்

''இறைவனைப் பற்றி சொல்லும்போது 'ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் அதிபதி' என்று சொல்வதுண்டு. பூமியைப் போலவே இந்தப் பிரபஞ்சத்தில் 14 உலகங்கள் இருப்பதாக புராணங்கள் தெரி விக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

பிரம்மன் வாழும் சத்தியலோகம்

தேவதைகள் வாழும் தபோலோகம்

பித்ருக்கள் வசிக்கும் ஜனோலோகம்

இந்திரன் முதலான தேவர்கள் இருக்கும் சொர்க்கலோகம்.

முனிவர்கள் இருப்பிடமான மஹர்லோகம்.

மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஜீவராசிகள் வாழும் பூலோகம்.

இந்த 7 உலகங்களும் பூமியின் மேல் பகுதியில் இருக்கின்றன.

அதே போல் பூமிக்கு கீழேயும் 7 உலகங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அவை...

அரக்கர்கள் வசிக்கும் அதல, விதல என்னும் இரண்டு லோகங்கள்.

அசுர குலத்தில்  பிறந்து விஷ்ணுவால் ஆட் கொள்ளப்பட்ட மகாபலி இருக்கும் சுதலலோகம்.

மாயாவிகளால் நிரம்பிய தலாதல லோகம்.

புகழ்பெற்ற அசுரர்கள் வாழும் மகாதலலோகம்.

வாசுகி முதலான பாம்புகள் வசிக்கும் பாதாள லோகம்.

அசுரர்களின் குரு வசிப்பதாக சொல்லப்படும் ரஸாதலலோகம்.''

No comments:

Post a Comment