கூட்டுறவுத் துறை வரலாற்றில் முதல்முறையாக நடப்பாண்டில் 13.49 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

கூட்டுறவுத் துறை வரலாற்றில் முதல்முறையாக நடப்பாண்டில் 13.49 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன்!

சென்னை, ஜன. 4--  தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், விவசாயி களுக்கு பயிர்க்கடன், நகைக்க டன் உள்ளிட்ட 17 வகையாக கடன்கள் கூட்டுறவுத் துறையால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூட்டுறவுத் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக நடப்பாண்டில் 13.49 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.10,361.54 கோடி கடன் வழங்கப்பட்டு சாதனை படைத் துள்ளது. 

குறிப்பாக 12 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதில் 9 மாதங்களிலேயே ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி யுள்ளது. 

அதேபோல், இதுவரை கூட்டுறவுத் துறையில் இல்லாத அளவில் கடந்த ஆண்டு 5.87 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதில் 2.80 லட்சம் நபர்களுக்கு ரூ.1,730.81 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், நடப்பாண்டில் லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,588.76 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கூட்டுறவுத் துறையில் முதல்முறையாக ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு, வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டம் ஆண்டு கடந்த அறிமுகப்படுத்தப்பட்டு, இது வரை 2.15 விவசாயிகளுக்கு ரூ.977.99 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது.

 கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கணவ னால் கைவிடப்பட்ட பெண்கள் 5 சதவிகித வட்டியில் கடன் வழங்குவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப் பட்டன. 

அதில் இதுவரை ரூ.8.48 கோடி கடன் கூட்டுறவுத்துறை மூல மாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நடப்பாண்டில் நகைக் கடன்கள் ரூ.5.01 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 13.12 லட்சம் குடும்பங்கள் பலன் அடைந் துள்ளன. 

தமிழ்நாடு முழுவ தும் உள்ள 10,776 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.49.42 கோடி கடன் நடப்பாண்டில் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 

இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயரதிகாரி கூறியிருப்பதாவது:

கூட்டுறவுத்துறையில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடன் ரூ.1029 கோடி வழங்கப் பட்டு முதன் முதலாக 10 ஆயிரம் கோடி கடன் வழங்கி சாதனை படைத்தோம்.

 தற்போது இந்த நிதியாண்டு (2022-2023) 9 மாதங்களிலேயே 13.49 லட்சம் விவ சாயிகளுக்கு ரூ.10,361 கோடி கடன் வழங்கி முந்தைய சாதனையை முறிய டித்துள்ளோம். 

இந்த மிகப்பெரிய சாத னையை படைக்க உதவிய கூட் டுறவு சங்க உறுப்பினர்களுக்கும், அனைத்து பணி யாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், அடுத்த நிதியாண்டு (2023-2024) கூட்டுறவுத்துறையில் 15 ஆயிரம் கோடி வரை இலக்கு நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

No comments:

Post a Comment