சேது கால்வாய் திட்டம் முட்டுக்கட்டை போட்டு முடக்கியது யார்? ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

சேது கால்வாய் திட்டம் முட்டுக்கட்டை போட்டு முடக்கியது யார்? ஏன்?

கவிஞர் தமிழ்தாசன் 
தி.மு.கழகத் தீர்மானக் 
குழுத் தலைவர்

நேற்றையத் தொடர்ச்சி...

இத்திட்டம் நிறைவேற்றப்படும் வகையில் இதன் தொடக்கவிழா 2005 ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் இந்திய நடுவணரசு தலைமையமைச்சர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கலைஞர், அய்க்கிய முற்போக்குக் கூட்ட ணித் தலைவரும் இந்திரா காங்கிரசு கட்சித் தலைவரு மான சோனியாகாந்தி முன்னிலையில் சிறப்பு விருந்தி னராக தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, ஒன்றிய அமைச் சர்கள். சிதம்பரம், தயாநிதிமாறன், ஆ.இராசா, அன்புமணி ராமதாசு, மணிசங்கர அய்யர், கே.எச். முனியப்பன் ஆகி யோரும், தமிழகத்தின் பல்வேறு கட் சித் தலைவர்களான ஜி.கே. வாசன், எம்.பி., டாக்டர் இராமதாஸ், வைகோ, என்.வரதராசன், தா.பாண்டியன், கே.எம்.காதர்மொய்தீன் எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் கலைஞர் ஆதரவு தெரிவித்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் அமைந்த போது, கப்பல், சாலை போக்குவரத்து அமைச் சராக திமுகவைச் சார்ந்த டி.ஆர்.பாலு அவர்கள் பொறுப் பேற்றார்.

கலைஞரின் அறிவுரையை ஏற்று தமிழக நலன் காக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முழுவடிவம் தந்து டி.ஆர்.பாலு வேகமாகச் செயல்பட்டார். இத் திட்டம் செயல்பட வேண்டிய காரணங்கள் குறித்து நாடாளு மன்றத்தில் விளக்கம் தந்தார் டி.ஆர்.பாலு.

4.5.2005 அன்று செய்தியாளர்களிடத்தில் ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலு, சேது சமுத்திரத்திட்டம் உரு வான வரலாறு, அதற்காக திமுக எடுத்த ஆக்கப்பூர் வமான செயல் வடிவங்கள் குறித்து விளக்கிக் கூறினார். டி.ஆர். பாலு சேது சமுத்திரத் திட்டத்தின் பயன்கள் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறினார்.

"சேது கால்வாய் பொருளாதார ஆய்வுகளின்படி உருவான இத்திட்டப்படி, 10.2 சதவீதம் வருவாய் ஈட் டித்தரும் என்பது வல்லுநர்களின் மதிப்பீடாகும். சேது கால்வாய் மொத்த நீளம் 167 கி. மீட்டர். அகலம் 300 மீட்டர். கால்வாய் இருவழிக் கப்பல் போக்குவரத்துக்கு வசதியாக அமைக்கப்படும். ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்கள் எதிரெதிர் திசைகளில் செல்ல இயலும்" மொத்த நீளமான 167 கி.மீட்டரில் 87 கி.மீ. மட்டுமே தூர் வாரி ஆழப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளது. தூர் வாரப்படும் கடல்பகுதி மணல் அளவு 82.5 மில்லியன் கன மீட்டர் ஆகும்.

11க்கும் மேற்பட்ட துறைமுகங்களுக்குக் கப்பல்கள் 424 கடல் மைல்கள் செல்ல வேண்டியுள்ளது. அதாவது 765 கி.மீ. தூரம் இலங்கையைச் சுற்றி 30 மணி நேரம் செலவழித்துச் செல்ல வேண்டும்.

தற்போது எடுத்த சேது கால்வாய் திட்டப்படி 12 மணி நேரத்தில் 167கி.மீ. தூரம் இந்தியத் துறைமுகங்களைக் கடக்க முடியும். 50,000 டன் சரக்குக் கப்பல்கள் வரை எதிரெதிர் திசையில் சென்றுவர இயலும்.

8000 கார்களை ஏற்றிச் செல்லும் கார் கப்பல்கள் செல்ல முடியும். 33 மீட்டர் அகலம், 215 மீட்டர் நீள முள்ள இரண்டு கப்பல்கள் எதிரெதிரே செல்ல இயலும். கப்பல்களை சூறாவளி, புயல் தாக்கும் நேரங்களில் திறந்தவெளி கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திடத் தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கப்பலின் பயண வேகம் மணிக்கு 14.4 கி.மீ., அதா வது 8 கடல் மைல்கள் பயணிக்க முடியும். கப்பலை வழி நடத்திச் செல்லத் தேவையான மாலுமிப் படகுகள், இழுவைக் கப்பல்கள், வழிகாட்டி மிதவைகள், கப்பல் பாதை ஒளி விளக்குகள் போன்றவை சேதுத் திட்டத்தில் சிறப்பம்சமாக சேர்க்கப்பட்டுள்ளன.

கடல்சார் தொழில்நுட்பக் கப்பலியக்கம், மேலாண்மை நுணுக்கங்கள், கடலோர மக்கள் பாதுகாப்பு, தொழில் முன்னேற்றம் ஆகியன குறித்தும் நேர்மையான, வெளிப் படையான ஆய்வுகளை 14 புகழ்பெற்ற நிறுவனங்களா லும், தொழில்திறன் வாய்ந்த 60க்கும் மேற்பட்ட தலை சிறந்த வல்லுநர்களாலும் மேற்கொள்ளப்பட்டு இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல், வானிலை, கடலியல் தொழில்நுட்பம் போன்றவை குறித்தும் பொறியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து பாதுகாப்பு அரண் தந்துள்ளனர்'

ஆகவே, இலங்கையைச் சுற்றி வராமல் கன்னியா குமரியில் இருந்து மன்னார் வளைகுடா, ஆதாம் பாலம், பாக் கடல், பாக். ஜலசந்தி வழியாக வங்கக்கடல் சென்ற டைய ஒரு கடல் வழிப்பாதை அமைப்பதுதான் சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம் என்பதாகும்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 700 கி.மீ தூரம் மிச்சப்படுகிறது. பயணிகளுக்கு இரண்டரை நாள்கள் மிச்சப்படுகின்றன. எரிபொருள் மிச்சம். ஏற்றுமதி, இறக் குமதிச் செலவுகள் மிகவும் குறையும். வெளிநாட்டுச் செலாவணி மிச்சம். சென்னை, தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம் துறைமுகங்கள் பன்னாட்டுப் பரிமாற்ற மய்யங்களாகச் செயல்படும். எண்ணூர் முதல் குளச் சல்வரையுள்ள பெருந் துறைமுகங்கள், சிறு துறைமுகங் கள் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உருவாகும். வேலை வாய்ப்புகள் பெருகும்.

சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழல் தாக்கம் நீக்க அல்லது குறைக்க அறிவியல் பூர்வமாக நடவடிக்கை எடுப்பதுடன், மீன்வளம் பாதிக்காமல் இருக்க பவளப் பாறைகள் கெடா வகையில் செயல்திட்டம் உரு வாக்கப் பட்டது.

இத்திட்டம் நிறைவேறினால் கப்பல்கள் செல்லத் தொடங்கும் பொழுது 10.7 மீ. மிதவை ஆழத்திற்கு ஏறத் தாழ 50,000 டன்கள் வரை சரக்குகள் கொண்ட கப் பல்கள், ஆண்டிற்கு 3000 வரை செல்ல வாய்ப்புகள் உருவாகும்.

இதனால், மீனவர்கள் வாழ்க்கை மேம்படும். மீன் பிடித் தொழிலும் மேலும் வலுப்பெறும். மீனவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அவர்கட்கு முழுச்செலவைத் திட்டநிறுவனம் ஏற்றுக் கொள்வதாக இருந்தது.

இத்திட்டத்திற்காகச் 'சேது சமுத்திரக் கழகம்' என்ற நிறுவனம் அமைக்கப்பட்டது. கடல் வாணிபம் பெரு கும். சிறு, குறுந் துறைமுகங்கள் உருவாகும்.

இந்நோக்கத்தில் தான் இத்திட்டப்பணியாகிய கால் வாய் வெட்டும் பணி தொடங்கியது. 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 824 கோடி ரூபாய் மக்கள் வரிப் ணம் செலவழித்து சேதுக் கால்வாய்த் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், இன்னும் சிறு பகுதி, சில கி.மீ. தூரப் பணிகள் முடிவுறும் தறுவாயில், மதவாதிகள் சிலரும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், அ.தி.மு.க. கட்சித் தலைவி ஜெயலலிதா வும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

உயர்நீதிமன்றத்திலிருந்த இந்த வழக்கு தடையை நீக்கி ஆணையிட்டதால், தற்போது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தமிழக மக்கள் வழங்கிய தவறான தேர்தல் முடிவால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததன் காரணமாக கனவுத் திட்டமான சேதுக்கால்வாய் தமிழனின் திட்டமே தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஜெய லலிதா அரசு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது.

'ஆதாம் பாலம்' எனக்கூறப்படும் இடத்தை 'இராமர் பாலம்' என்று இப்போது புதுக்கரடி விட்டு வருகிறார்கள்.

இது இராமன் கட்டின பாலம் என்றும், 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமன் கட்டினான் என்றும் கதை கட்டி வருகிறார்கள்.17 இலட்சம் ஆண்டு களுக்கு முன் மனிதன் வாழ்ந்தானா? என்று அறிவி யல் அடிப்படையில் சிந்திக்காமல், மூட நம்பிக்கையில் மூழ்கிச் சொதப்புகிறார்கள்.

'தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடை யில் இருக்கக்கூடியது வெறும் மணல் திட்டுக்களே என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் என்பதுடன் இதனை ஆதாம் பாலம் என்று வழங்குகின்றனர்.

பேராசிரியர் தமயந்தி இராஜ துரை என்பவர் ஆஸ்தி ரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகைய பாலங்கள் உள்ளன. அப்படியென்றால் அவைகளும் இராமன் கட்டிய பாலமா? என்று வினா எழுப்புகிறார்.

"இது மனிதன் உருவாக்கிய அமைப்பு அல்ல; இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டதே" என்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் ஆய்வுத்துறைத் தலைவர் என்.இராமானுஜம் தமது நூலில் எழுதியுள்ளார்.

புவியியல் நிகழ்வுகளுக்குக் கற்பனை வளமூட்டிய உலகம் முழுவதுமுள்ள பல எடுத்துக்காட்டுகளுள் இது வும் ஒன்று. தெற்கே உள்ள மணல் திட்டுக்களை இராமர் கட்டியிருந்தால், வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது?” என்று கடலியலாளர் க.சச்சிதானந்தன் வினா எழுப்பியுள்ளார். (இந்தியா நிசிலி நிலிஞி 23, 2007)

"தீவுகளுக்கு இடையேயும், தீபகற்பங்களுக்கும், இடையேயும் அவற்றை இணைக்கும் நிலப்பகுதிகள் கடலுக்குள் மூழ்கியுள்ளன. நிலப்பகுதிகள் மூழ்கியுள்ள கடல் பரப்பு ஆழம் குறைந்திருந்தால் வெளிர் நீலப்பகுதி கள், வெண்பகுதிகளாக தோன்றும். அப்படித் தெரிகிற இலங்கை, மண்டபம், தலைமன்னார் கடல் பகுதியை இராமர் பாலம் என்று புளுகிக் கொண்டிருக்கிறார்” என்று அறிஞர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், ஆஸ்திரே லியாவிலிருந்து பகுத்தறிவு ஏவுகணை வீசியுள்ளார்.

சென்னை அய்.அய்.டி. விஞ்ஞானிகள் 17.06.2007 அன்று அளித்த ஆய்வுச் செய்தியில், "கடல் வியப்பை அளிக்கும் செய்தி படைத்தது. மலைகள், ஓடைகள், பள் ளத் தாக்குகள் கடலில் உள்ளன. அவை கோடிக்கணக் கான ஆண்டுகளில் அரிப்பு ஏற்படுவதும், மேடு தட்டு வதுமாகிய நிகழ்வு படைத்தவை. கடலில் ஏற்பட்ட மாற் றங்களினால் இயற்கையாக உருவானதுதான் மேட் டுப்பகுதி. அவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை பகுதி என்றால் இலட்சக்கணக்கான ஆண்டு களில் எப்படி இராமர் பாலம் சேதம் அடையாமல் இருக்க முடியும்" என அறிவுரை சுத்தியால் மடைமை யாளர்களின் மண்டையில் ஆணி அறைந்துள்ளனர். அமெரிக்காவின் 'நாஸா' விண்வெளி ஆய்வு மய்யத்தின் அதிகாரி 'மைக்கேல் பிரவ்கசு' அளித்த விளக்கத்தில் "விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட எந்த வொரு புகைப்படத்திலும் இராமாயணத்தில் கூறப் பட்டுள்ளபடி மனிதர்களால் கட்டப்பட்ட எந்த ஒரு பாலமும் அந்த இடத்தில் இல்லை. அதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

"எங்கள் அறிவியல் அறிஞர்கள் எடுத்த புகைப் படத்தைச் சிலர் இராமர் கட்டிய பாலம் என்று அவர்கள் சொந்த விளக்கமாகக் கூறிக் கயிறு திரிக்கிறார்கள்" என்று நாசா அதிகாரி 'மார்க்ஹெஸ்' என் பவரும் கூறியுள்ளார். ஆனால் நாஸா வெளியிட்டது போல 'இன்டோலிங்கீகாம்' நிறுவன நெட் ஓர்க் என்னும் இணையதள அமைப்பு இந்துத்துவா கொள் கையை முரசடித்துள்ளது.

எனவே, நிலைமை இப்படியிருக்க, மதவாதிகள், பிற்போக்குச் சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ஜெயலலி தாவும் இத்திட்டம் நடைபெறக்கூடாது என்று கங்கணம் கட்டிச் செயல்பட்டு வந்தார்.

கலைஞர் இதனைக் கண்டித்து அறிக்கைகளும், சொற்போரும் நடத்திப் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

16.05.2007 அன்று சென்னை புல்லாரெட்டி அவினியூ, அமைந்தகரையிலும், 14.09.2007 அன்று சேலம் மாநகரி லும், 15.09.2007 ஈரோடு மாநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலும் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களிடம் பெரியாரும், அண்ணாவும், திமு கழகமும், பிறகட்சிகளும் முயற்சி செய்து கொண்டு வந்த சேது சமுத்திரத்திட்டம் குறித்தும், அதற்கு ஜெயலலிதா அடம்பிடித்துக் கொண்டு செய்துள்ள துரோகத்தையும் சுட்டிக் காட்டினார். அக் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், பா.ம.க. ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.

20.09.2007 அன்று கலைஞர் செய்தியாளர்களுக்கு "இராமர் வால்மீகி பாலம் குறித்து அளித்துள்ள செய்தியில், இராமாயணத்தில் இராமரைப்பற்றி எழுதப் பட்டதைப் போல நான் கூறவில்லை. இராமாயணம் ஒரு கதை, நான் எத்தனையோ நாவல்கள் எழுதவில்லையா? அதிலே எத்தனையோ கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன அவர்கள் எல்லாம். இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?” என்று பகுத்தறிவு சார்ந்த முறையில் சிந்திக்க விடையளித்தார்.

இராமாயணம் நடந்த கதையல்ல, அது நன்மைக் கும், தீமைக்கும் நடந்த போட்டி' என்று இராஜாஜி அவர்களே கூறியுள்ளார்.

'ஆரியர் - திராவிடர் போராட்டமே இராமாயணம்’ என்று மேனாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தமது இந் திய சரித்திர நூலில் தெரிவித்துள்ளார்.

கே.எம்.முன்ஷி, பண்டிதர், நேரு, இராஜாஜி, நீல கண்ட சாஸ்திரி, சுவாமி விவேகானந்தர் போன்றோர் இராமர் பற்றிய படைப்புகள் எழுதியுள்ளார்கள். ஆனால், வேண்டும் என்றே மதவாதிகளும், ஜெயலலிதாவும் 'ஆதாம் பாலம்' என்ற மணல் திட்டை ‘இராமர் பாலம்' என்று சப்பைக் கட்டு கட்டினார்கள்.

கலைஞர் ஏற்படுத்திய கடுமையான போராட்டம் நெருக்கடி. அழுத்தங்களினால், முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., ஏழாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் (1985-1990) சேது சமுத்திரத் திட்டத்தைச் சேர்க்க வலியுறுத்தி இருந்தார். தமிழக சட்டப்பேரவையில், (10.5.1985) அன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். மாநில திட்டக் குழு தந்த அறிக்கையினை (பக்கம் 698-699,) தாக்கல் செய்து (23.4.1987)முன்னுரிமை அடிப் படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், தானே அதில் கையெழுத்திட்டுச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கியும் உள்ளார்.

இதையெல்லாம் மறைத்து விட்டு முதன்முதலில் இராமர் பாலத்தை இடிக்கலாமா? இந்துக்களின் மனத்தை புண்படுத்தலாமா? என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. (நமது எம்.ஜி.ஆர்.26.7.2008) அதன்பின்னர் இந்தத்திட்டம் அறவே வேண்டவே வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலை. (நமது எம்.ஜி.ஆர். 14.08.2008) என்று கூறியதோடு உச்சநீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றார். 1999 ஆம் ஆண்டு முதல் மூன்று அ.தி.மு.க. தேர் தல் அறிக்கைகளில் இதே சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஜெயலலிதா என்ன கூறியிருந்தார் தெரியுமா?

1999ஆம் ஆண்டு செப்டம்பர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அறிக்கையில் (பக்கம் 3) பா.ஜ.க. ஆட்சி யைக் குறைகூறிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

"சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் உரையில் கூறிவிட்டு, ஒரு சல்லிக் காசுகூட அதற்கென நிதி ஒதுக்காது ஏமாற்று நாடகம் நன்றாக நடத்தினார்கள் பா.ஜ.க. ஆட்சியினர்

இதே ஜெயலலிதா 2001 மே 10 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்மன்ற பொதுத் தேர்தல் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருந்தது என்ன?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சி யான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங் கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள் ளன. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி இராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத்திட்டத்தின் தலையாய நோக்கம்.

2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க. தயாரித்த நாடாளு மன்ற தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப் பட்டுள்ளது. (பக்கம் 33)

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்த தொழில் மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்ற விருக்கும் சேதுசமுத்திர திட்டத்தினை நிறை வேற்றுவ தற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டன. இதை நாடு நன்கு அறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதி யினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரை யறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென்று, அமைய இருக்கும் ஒன்றிய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.'

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா 2.7.2005 அன்று மதுரையில் நடைபெற்றபோதே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில்,

'என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத்திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற்கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறு வனத்தின் அறிக்கையும் அதே ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சேதுசமுத்திரக் கால் வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்துவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன்” என்று குறிப் பிட்டார். அதாவது சேது சமுத்திரத் திட்டம் வருவதற்கே நான்தான் காரணம் என்பதைப்போல் கூறிக்கொண் டார். அப்படிச் சொல்லி அப்போது தனக்குப் பெருமை தேடிக்கொண்டார். அதன்பிறகு அதே திட்டம் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை நாடிச் சென்றது வேடிக்கை யான முரண்பாடு அல்லவா!

இராமர் பாலம் என்று கூறி, அதனை இடிப்பது இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் என்றுகூறி உச்சநீதி மன்றம் வரை சென்று ஹிந்துத்துவா கொள்கையை நிலைநாட்டும் விதத்தில் நடந்து கொண்டார் ஜெயலலிதா, 2001 தேர்தல் அறிக்கையில் இராமர் பாலம் என்று குறிப்பிடவில்லை. வெறும் மணல்மேடுகள் என்று தான் எழுதியிருக்கிறார். மூன்று தேர்தல் அறிக்கைகளில் சேதுசமுத்திரத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத் திய ஜெயலலிதா, இப்பொழுது அந்தத் திட் டமே தேவையில்லை. கூடாதென்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அர சின் சார்பில் மனு செய்ததை தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மரணக்குழியில் தள்ளி. பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்குக் கல்லறை கட்ட ஹிந்துத்துவா மதவாதிகளிடம் சரணாகதி அடைந்திருப்பதாகும்.

ஆகவே, தமிழர்களுக்கு நலம்பயக்கவல்ல சேதுக் கால்வாய்த் திட்டத்தை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போராடிக் கேட்டு வந்தனர். அதே போல, பெருந்தலைவர் காமராசர், ஜீவா, இராம மூர்த்தி, எம்.கலியாணசுந்தரம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ஏ.பி.சி, வீரபாகு, எஸ்.ஏ.முருகானந்தம், பழ.நெடுமாறன் போன் றோருடன் பல இயக்கங்களும் வலியுறுத்தி வந்துள்ளன.

மேலும், அ.தி.மு.க கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்தாம். ஏன்?

ஒ. பெர்னாண்டஸ் என்பவர்சேது சமுத்திரத் திட்டம் கூடாது என்று தொடுத்த வழக்கில் 17.12.2004 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க் கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி வி. பாலசுப்பிரமணி யம் அளித்த தீர்ப்பின் முக்கிய பகுதி "தேசிய நலனுக் காகக் கொண்டுவரப்படும் சேது சமுத்திரத்திட்டத்தை தடை செய்யும்நோக்கத்துடன் மனுதாரர் இந்த நீதி மன்றத்திற்கு விரைந்து வந்து வழக்கைத் தொடுத் துள்ளார். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நாட்டிற்கு மிகுந்த நற்பயனை கொடுக்கக் கூடியது என்பது எல் லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்குவர வேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியில் குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும் சேமிக்கப்படும் நேரமும் கப்பல் கம்பெனி களுக்கு ஏதுவாகும். எரிபொருள் செலவும் சேமிக்கப் பட்டு வியாபார விருத்திக்கு அவை பயன்பட வழி வகுக் கும். இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி துறைமுகம் மற் றும் கரையோர நகரங்களிலும் போக்குவரத்து மேம்பாடு அடைந்து அபிவிருத்தி செய்ய ஏதுவாகும். இத்திட்ட மானது சூயஸ் கால்வாய்த் திட்டத்தைப் போன்றது அதாவது, அய்ரோப்பா நாட்டிலிருந்து ஆசியாவின் துறைமுகங்களை அடைய வேண்டிய கப்பல்கள் சூயஸ் கால்வாயை அடைவதற்கு முன், ஆப்பிரிக்கக் கண்டத்தை முழுவதும் சுற்றி வலம்வர வேண்டிய தாய் இருந்தது. சூயஸ் கால்வாய்த் திட்டத்தின் மூலம் மேற்படி சுற்றல் பயணம் தவிர்க்கப்பட்டு காலம் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்பட்டது. இதே மாதிரி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடியதே, பொதுமக்களின் கருத்தறிந்து மாவட்ட ஆட்சியாளர்கள் ஏற்கெனவே தங்கள் அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்கள். எங்கள் அபிப்பிராயத்தில் சேது  சமுத்திரக் கால்வாய் திட்டம் விரைவில் முடிவடைய நாட்டின் மற்றும் அறிவியல் ஏதுவாகும். தொழில்நுட்ப முன்னேற்றங் களை சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற கருத்தை வலியு றுத்துவதன் மூலம் தடை ஏற்படுத்துதல் கூடாது என்ற இந்த வழக்கை விட்டு பிரியும் முன் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்”

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அமைச் சர் நிதின் கட்காரி கூறும்போது, "சச்சரவிற்குள்ளான சேது சமுத்திரத்திட்டம் சமரசம் ஏற்படும் வகையில், மாற்று வழியில் செல்ல முடிவுகாணப்பட்டுள்ளது" என்றார்.

இந்நிலையில், இராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்று நாடாளு மன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறி இருப்பது பற்றி,சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியதோடு, இராமர் பாலம் குறித்து மக்களைத் தவறாக வழி நடத்திய மோடி அரசு பகிரங்க மாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இது குறித்து ஆர்.எஸ்.எஸ். எந்தக் கருத்தும் கூறி விமர்சிக்காதது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும் பேசி உள் ளார். ஆகவே நீண்டகாலமாக முடக்கப்பட்டுக் கிடக்கும் நாட்டின் நலம் பயக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை உட னடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் பற்றி வலியுறுத்தி தி.மு.கழக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் (2021) 112ஆவது கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப் பட்டுள்ளது.

ஏற்கெனவே பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட் டிற்கான உரி மைகளை கேட்டு வைத்த கோரிக்கைகளில் சேது சமுத் திர திட்டமும் ஒன்றாகும்.

அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை தளபதி தலைமையிலான தமிழக அரசு நரேந்திர மோடியின் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது.

முற்றும்

நன்றி: ‘முரசொலி‘, 29.12.2022

No comments:

Post a Comment