பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் மறுமணம் செய்தவரை ஆடையைக்கிழித்து கொடுமைப்படுத்திய ஊர்மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் மறுமணம் செய்தவரை ஆடையைக்கிழித்து கொடுமைப்படுத்திய ஊர்மக்கள்

அம்ரேலி, டிச. 18-கணவன் இறந்தால் மறுமணம் செய்வாயா என்று 21 வயது பெண்ணின் ஆடையை கிழித்து தலைமுடியை வெட்டி அவமானப்படுத்திய நிகழ்வு குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அவரது கணவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிகழ்வு இளம்பெண்ணை வெகுவாக பாதித் துள்ளது. இதனையடுத்து கணவன் இறந்த சில மாதங்கள் கழித்து அப்பெண் மற்றொரு திருமணத் திற்கு தயாராகியுள்ளார். ஆனால் இதற்கு முதல் கணவர் வீட்டிலிருந்து கடும் எதிர்ப்புகள் தலை தூக்கி இருந்துள்ளன. 

ஆனால் அப்பெண் இதையெல்லாம் பொருட் படுத்தாமல் தொடர்ந்து மாப்பிள்ளை தேடி வந்துள் ளார். எதிர் பார்த்ததைப்போல மாப்பிள்ளை கிடைத்திருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு தேவையான வேலைகளில் இளம்பெண் இறங்கி யுள்ளார். இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத முதல் கணவரின் குடும்பத்தினர் இளம்பெண்ணை வீடு தேடி வந்து மிரட்டி சென்றுள்ளனர். ஆனால் அப்போதும் அப்பெண் இவர்களின் அச்சுறுத்தல் களுக்கு இணங்கவில்லை. எனவே ஆத்திரம டைந்த குடும்பத்தினர்  இளம்பெண்ணை கடுமை யாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காட்சிப் பதிவில் இளம்பெண்ணை மூன்று பெண் கள் மற்றும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கியுள்ளனர். வீட்டின் தூணில் இளம்பெண்ணின் முதல் கணவ னின் சகோதரிகள் இறுக்கிப் பிடித்துக்கொள்ள ஒரு ஆண் கம்பை கொண்டு அடித்துள்ளார். வீட்டிற்கு வெளியில் நடக்கும் இந்த வன்முறையை கிராம மக்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் இளம்பெண்ணின் தலைமுடி யைப் பிடித்து தரையில் அவரது தலையை ஒரு ஆண் இடிக்கிறார். அவரது ஆடைகள் கிழிக்கப் பட்டிருக்கின்றன. தலை முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலின் போது கிராம மக்கள் முதல் கணவனின் குடும்பத்தி னருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித் தனர். விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "இளம்பெண்ணின் முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளார்கள். கொடூரமான முறை யில் அவள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளனர். இந்த நிகழ் விற்கு மகளிர் அமைப்புகள் கண்டம் தெரிவித்துள்ளன.  மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட் சியை கைப்பற்றியுள்ளது.  குஜராத்தில் மூடநம்பிக் கைகள் நகரம், கிராமம் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. தாழ்த்தப்பட்ட மக் கள் தசரா நாட்களில் உயர்ஜாதியினர் கோலாட்டம் என்னும் தாண்டியா நிகழ்வை பார்த்தால்கூட அவர்கள் தாக்கப்பட்டு கொலைசெய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.

No comments:

Post a Comment