அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குக! - முதல் திருநங்கை நீதிபதி ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குக! - முதல் திருநங்கை நீதிபதி ஆலோசனை

கொல்கத்தா, டிச.19 மேற்கு வங்கத்தில் 2017-இல் இஸ்லாம்பூர் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஜோயிதா மொந்தல். இவர்தான் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி. அதன்பின் 2018-ஆம் மகாராட்டிர மாநிலம் நாக்பூர் மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை வித்யா காம்ப்ளே நீதிபதியானார். அதே ஆண்டில், குவா ஹாத்தியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா 3-ஆவது திருநங்கை நீதிபதியானார்.

 இந்நிலையில் இந்தூரில் 16.12.2022 அன்று  நடந்த  விழா  ஒன்றில் நீதிபதி ஜோயிதா மொந்தல் கூறியதாவது: அரசு வேலை களில் திருநங்கை சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மிக முக்கியம். இடஒதுக்கீடு மூலம் காவல் துறைமற்றும் ரயில்வேயில் திருநங்கைகள் சேர்ந்தால், அது அவர்களை முன்னேற்றுவதுடன் அவர்கள் மீதான சமுதாயத்தின் பார்வையும் மாறும். திருநங்கைகளின் பிரச்சினைகளில் அதி காரிகள் உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும். நாட்டில் திருநங்கைகளுக்கு போதிய அளவில் காப்பகங்கள் தேவை. இவ்வாறு நீதிபதி ஜோயிதா கூறினார்.


No comments:

Post a Comment