ஆளுநர் ரவிக்கு அர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பொறியாளர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

ஆளுநர் ரவிக்கு அர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பொறியாளர் தற்கொலை

கோவை, டிச.15 ஆன்லைன் சூதாட்டத் தில் பணத்தை இழந்ததால் கோவை பொறியாளர் தூக்குப் போட்டு தற் கொலை செய்துகொண்டார்.  கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளை யம், ஆர்.வி.எல்.நகரை சேர்ந்தவர் ராம சாமி. இவருடைய மகன் சங்கர் (வயது 29). பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைன் சூதாட்ட பழக்கம் இருந்து வந்தது. இதில் லட்சக் கணக்கான பணத்தை இழந்து கடன் தொல்லையால் அவதிபட்டு வந்தார். 

இந்த நிலையில் இவர் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண் டார். கடிதம் சிக்கியது தகவலறிந்து காட்டூர் காவல்துறையினர் சென்று ஓட்டல் அறையில் சோதனை செய்த போது, சங்கர் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்திருந்தார். எனவே, அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார்? என்றும், தற் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடை பெறுகிறது. கோவையில் இதுவரை 4 பேர் உயிரை மாய்த்துள்ளனர். கோவை யில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் பொருட் காட்சி வளாகத்தில் ஆயுதப்படை காவ லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் வங்கி ஊழியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சிங்கா நல்லூரில் வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண் டார். நேற்று பொறியாளர் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இதுவரை 4 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment