புயல் - மழை: முன்கூட்டியே திட்டமிட்டதால் பாதிப்புகள் குறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி - - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

புயல் - மழை: முன்கூட்டியே திட்டமிட்டதால் பாதிப்புகள் குறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி -

சென்னை, டிச.11 மாண்டஸ் புயல் மற்றும் கன மழை தொடர்பாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால், பாதிப்புகள் மிகவும் குறைவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் நேற்று (10.12.2022) மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கனமழை காரணமாக இதுவரை நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள்படி 4 உயிரிழப்புகளும், 98 கால்நடை இறப்புகளும் பதிவாகியிருக்கிறது. 181 வீடுகள், குடிசைகள் சேதமடைந்திருக்கிறது. மற்ற சேத விவரங்களெல்லாம் முறையாக கணக்கெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் சூழ்நிலையை உணர்ந்து, அவர்களை பாதுகாப்பாக  தங்க வைப்ப தற்கு முன்னரே நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டன. இந்த நிவாரண முகாம்களை பொறுத்தவரை, 201 நிவாரண முகாம்களில், 3163 குடும்பங்களைச் சார்ந்த 9130 நபர்கள்  தங்கவைக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டி ருக்கிறது.  கண்காணிப்பு அலுவலர்கள், தொடர் புடைய மாவட்டங்களில் முகாமிட்டு அந்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 496 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம், அந்த கடமை களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

சென்னையைப் பொறுத்தவரை, மாநகராட்சிப் பகுதிகளில் 70 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றின் காரணமாக, சுமார் 400 மரங்கள் விழுந் திருக்கிறது. 150 மரங்கள் தெரு விளக்குகள் மீது விழுந்து சாய்ந்திருக்கிறது.  மேலும், சேதாரங்களை சரிசெய்ய இப்போது 25,000 பணியாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 900 மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறது, அதில் 300 மோட்டார்கள் தான் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. 22 சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கவில்லை, அதனால் போக்கு வரத்து எந்தவித தடையும் இல்லாமல் சீராக போய்க் கொண்டிருக்கிறது. வீழ்ந்த மரங்களை அப்புறப் படுத்துவது, மின்கம்பங்களை சரிபடுத்துவது ஆகி யவை உடனுக்குடன் செய்யப்பட்டுக் கொண்டிருக் கிறது. வாகனப் போக்குவரத்திற்கும் எந்தவித இடை யூறும் இல்லாமல் விரைவாக சீர்செய்யப்பட்டிருக்கிறது. 

அதேபோல தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலத்த காற்றின் காரணமாக, மின்கம்பங்கள், மின் கடத்திகள் சேதம் அடைந்திருக்கிறது. அதன் காரணமாக, மக்களுடைய பாதுகாப்பிற்காக 600 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.  600 இடங்களில் துண்டிக்கப்பட்டிருந்தாலும், இப் போது வரைக்கும் 300 இடங்களில் அது சீர் செய்யப்பட்டிருக்கிறது.  மீதமுள்ள பணிகளை சீர் செய்யும் பணிகளும்  விரைவாக நடைபெற்று வரு கிறது. அதுவும் மீதமுள்ள பணிகளையும் இன்று மாலைக்குள் சரி செய்துவிடுவோம் என்று மின்துறை அமைச்சரும், மின்துறை அதிகாரிகளும் என்னிடத் தில் சொல்லியிருக்கிறார்கள். சேத மதிப்பீடும் கணக் கிடப்பட்டிருக்கிறது. அந்தக் கணக்கெடுப்பெல்லாம் வந்தவுடன் விரைவாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். முன் கூட்டியே திட்டமிட்ட காரணத்தால், எந்தப் பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை இந்த அரசு இன்றைக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

இந்தப் பணிக்கு முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய, இன்னமும் அந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், குறிப்பாக நம்மு டைய துப்புரவுப் பணியாளர்கள், அத்தனை பேருக் கும் மீண்டும் ஒருமுறை உங்கள் சார்பில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். 

செய்தியாளர்: பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஒன்றிய அரசின் உதவி கேட்கப்படுமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:  தேவைப்பட்டால் கேட்போம்.

செய்தியாளர்: மீனவர்கள் தரப்பிலும், பொது மக்கள் தரப்பிலும் ஏதாவது கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: பாதிக்கப்பட்ட படகுகளுக்கு  நிவாரணத் தொகை கேட்டிருக் கிறார்கள்.  கணக்கெடுப்பு முழுமையாக எடுத்த பிறகு அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

செய்தியாளர்: விசைப்படகுகளை மட்டும் கணக்கெடுத்திருக்கிறார்கள், பைபர் படகுகள் கணக் கெடுக்கவில்லை என்று காலையில் குற்றச்சாட்டு வந்திருக்கிறதே?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இல்லை, இல்லை. அதெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது. அது தவறான குற்றச்சாட்டு.

செய்தியாளர்: வேறு மாவட்டங்களுக்கு ஆய் வுக்குச் செல்வீர்களா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஆங்காங்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள், ஆட்சித்தலைவர்கள் இருக்கிறார்கள், குறிப்பு வருகிறது. தேவைப்பட்டால், அமைச்சர்களோ, அல்லது நானோ போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் போவோம்.

செய்தியாளர்: மாண்டஸ் புயலால் சுமார் எவ்வளவு தொகை இழப்பு ஏற்பட்டிருக்கும்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:  அந்தக் கணக் கெடுப்பு வரவில்லை, முழுமையாக வந்தபின் சொல்கிறேன். ஏனென்றால், இன்று ஒன்று சொல்லி விட்டு,  நேற்று இப்படி சொன்னீர்களே, இன்று இப்படி சொல்கிறீர்களே என்று நாளை நீங்கள் சொல்லக் கூடாது.

செய்தியாளர்: நிவாரணம் கொடுக்கும்போது,  மக்களை சந்தித்திருப்பீர்கள், மக்கள் என்ன சொல் கிறார்கள்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். திருப்தியாக இருப்பது மட்டுமல்ல, ஒத்துழைப்பும் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். அதனால்தான்,  அரசு முறையாக உரிய வகையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி யாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment