காஞ்சிபுரத்தில் இல்ல அறிமுகவிழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

காஞ்சிபுரத்தில் இல்ல அறிமுகவிழா!

காஞ்சிபுரம், டிச. 11- அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில், அசோக்நகர், இந்திரா அவென்யூவில் 11.12.2022 அன்று காலை 10.00 மணியளவில், இந் திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வளர்ச்சி அலுவலராகப் பணி யாற்றி பணி நிறைவு செய்த விடுதலை வாசகர் பெ. சின்னதம்பி, அரசுப் பள்ளி ஆசிரியர் வாசுகி ஆகியோரின் 'வாசுகி இல்லம்' அறிமுக விழா நடைபெற்றது. விடுதலை வாசகர் வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஆர். செல் வராஜ் புதிய இல்லத்தைத் திறந்து வைத்தார்.

இந்திய வரலாற்றில் முதல் சிந்தனையாளர் என்று தந்தை பெரியா ரால் சொல்லப்பட்ட புத் தருடைய படத்தை ஆர். செல்வராஜ், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை பி.ஜி. கமலநாதன், ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக ளுக்காக தன் வாழ்க் கையை அர்ப்பணித்த புரட் சியாளர் அம்பேத்கர் படத்தை சுப்பிரமணி ஆகி யோர்  திறந்து வைத்தனர். 

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் தொண்டால் சின்னதம்பி - வாசுகி ஆகியோரின் மூத்தமகன் பல்லவன் கனரா வாங்கியில் துணை மேலாளராகவும்  மகள் இளைய நிலா முதுநிலை பல்மருத்துவராகவும், இளையமகன் பகலவன் மருத்துவராகவும் உள்ளனர்.

பார்ப்பனர் இல்லா மல், தீமூட்டி புகைபோ டாமல், சடங்குகள் இல் லாமல் இல்லம் திறந்து வைக்கப்பட்டது. காஞ்சி மண்டல திராவிடர் கழ கச் செயலாளர் முனைவர் பா. கதிரவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

No comments:

Post a Comment