எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு: காவல்துறையினர் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு: காவல்துறையினர் விசாரணை

சென்னை, டிச. 21, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அருகே கலைஞர் கருணாநிதி நகர் உள்ளது. இங்கு அதிமுக நிறுவனரும், மேனாள் முதல்-அமைச்சரு மான எம்.ஜி.ஆர். உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த எம்.ஜி.ஆர். சிலையை அதி முக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த மேனாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா கடந்த 2001ஆம் ஆண்டு திறந்து வைத்தார். மேனாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் சிலையும் நிறுவப்பட்டது. அதிமுகவின் இருபெரும் தலைவர்களின் சிலைகளுக்கு பிறந்த நாள், மறைந்த நாள்களில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு சில நபர்கள் காவித் துண்டு அணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்கு சில நபர்கள் நேற்று (20.12.2022) மதியம் காவித்துண்டு அணிவித்து சென்றுள்ளனர். இதை கண்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்து சென்றது யார் என்று காவல் துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எம்.ஜி.ஆர். சிலையில் இருந்த காவித்துண்டையும் காவல்துறையினர் அகற்றினர்.


No comments:

Post a Comment