'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கோரிக்கை

சென்னை,டிச.30 நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலை வரிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலி யுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பி.ரத்தின சபாபதி, பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கூட் டாக சென்னையில் செய்தியாளர் களிடம்  28.12.2022 அன்று கூறிய தாவது:  நீட் விலக்கு மசோதா எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தோம். அதற்கு ஒன்றிய அரசு நீட் விலக்கு மசோதா குறித்து சில கேள்விகளை மாநில அரசிடம் கேட்டதாகவும், அதற்கான விவரங் களை மாநில அரசு வழங்கியதாகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் வந்தது.

ஆளுநர் மாளிகையை பொறுத்த வரை, பரிசீலனையில் இருப்பதாக மட்டும் தெரிவிக்கப் பட்டது. 

அதேபோல, ‘இந்த மசோதா தவறானது. தேசிய கல்விக் கொள் கைக்கு எதிரானது’ என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித் துள் ளது. நீட் தேர்வு தரத்தை உறுதி செய்யவில்லை. வணிக லாபத் துக்காக மட்டுமே பயன்படுகிறது. இந்த நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே குடியரசுத் தலைவரின் ஒப் புதலை பெற வேண்டியது அவ சியம். நீட் மசோதா குறித்து ஒன்றிய அரசு கேட்ட கருத்துகளுக்கு அளித்த பதிலை சட்டப் பேர வையில் தமிழ் நாடு அரசு பதிவு செய்யவேண்டும். மசோதா மீது நடவடிக்கை எடுக்க 15 மாத காலமாகிறது என்ற தகவலை குடியரசுத் தலைவருக்கு தெரிவித்து, இதற்கு அவர் ஒப்புதல்தரக் கோரி பேரவையில் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்ற வேண் டும்.  பிற மாநில முதலமைச்சர்களும் தங்கள் சட்டப் பேரவைகளில் தீர் மானம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். 

நீட் விலக்கு மசோதாவுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தொடர் போராட் டங்களை முன்னெடுக்க வேண்டும்.

-இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment