'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம்

‘ஒரு கோடியே ஒன்றாவது பயனாளி’க்கு மருந்து பெட்டகம் வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருச்சி, டிச.30 தமிழ்நாடு அரசு அமல்படுத்தி உள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்  திருச்சி அருகே உள்ள கிராமத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு  மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது. இந்த திட்டத்தின் படி இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின் றனர். அரசு சார்பில் செவிலியர்கள் வீடு தோறும் சென்று, உடல்நலம் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள் ளவர்களை சந்தித்து, அவர் களின் உடல்நிலை குறித்து சோதனை செய்து மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. திமுகஅரசின் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. குறிப்பாக கிராமப் புற மக்களின் மருத்துவ செலவு கணிசமாக குறைந் துள்ளது. இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளி,  திருச்சி, சன்னாசிபட்டியில்  மீனாட்சிக்கு மருந்து பெட் டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.  தொடர்ந்து அவரிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியின்போது, முதலமைச் சருடன், விளை யாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச் சர்கள் நேரு,  மா.சுப்பிர மணியன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்பட  மருத்துவர்கள், செவிலியர் கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment