கொரட்டூர்: கோரா நினைவு மேடை ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

கொரட்டூர்: கோரா நினைவு மேடை ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் சிறப்புரை

ஆவடி, டிச. 7- ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கான நினைவு நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப் புரை ஆற்றினார்.

ஜாதிஒழிப்புப் போராளி களின் ஈகத்தை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 25, 26 ஆகிய தேதி களில் பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனடிப்படையில் ஆவடி மாவட்ட கழகத்தின் சார்பில் நவம்பர் 25 ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கு கொரட்டூர் பேருந்து நிலையத்திற்கருகில் பொதுக்கூட்டம் நடைபெற் றது.

59ஆவது கொடி மரத்தில் துணைத் தலைவர் கொடியேற்றினார்!

அம்பத்தூர் பகுதித் தலை வர் பூ.இராமலிங்கம் தலை மையில், மாவட்டச் செயலா ளர் க.இளவரசன் அனைவரை யும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட இளைஞரணித் தலை வர் வெ.கார்வேந்தன், ஆவடி பகுதித் தலைவர் இரணியன், கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறி வுப் பாசறை ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால் ஆகி யோர் கூட்டத்தின் தலைப்பை யொட்டி உரையாற்றினர். சென்னை மண்டலச் செயலா ளர் தே.செ.கோபால், பெரியார் அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் திருவள்ளூர் மாவட் டத்தலைவர் கி.ஏழுமலை, பகுதி செயலாளர் அய்.சரவ ணன், பி.எஸ்.என்.எல். தனுஷ் கோடி, தி.மு.க.பகுதிச் செயலா ளர் எம்.டி.ஆர்.நாகராஜ், தி.மு.க. வட்டச்செயலாளர் மு.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித் தனர். கவிஞர் பேசுவதற்கு முன்பு தி.மு.க. பகுதிச் செயலா ளரும், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ. கோபாலும் கவிஞருக்கு ஆடை அணிவித்து மரியாதை செய்தனர். அம் பத்தூர் பகுதித் தலைவர் பூ.ராமலிங்கம் கவிஞருக்கு பழக் கூடை அளித்து மகிழ்ந்தார். கூட்டத்திற்கு வருகிற வழியில் பாடி சரவணா ஸ்டோர்ஸ் அருகில் 59 ஆவது கழகக் கொடியை துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்றி வைத்தார். 

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை திராவிடர் கழகம் ஏன் நடத்தியது?

இறுதியாக கழகத் துணை தலைவர் கவிஞர் பேசினார். அவர் தனது உரையில் "திராவிடர் கழகத்தின் முக்கிய பணியாக ஒன்று ஜாதி ஒழிப்பு, மற்றொன்று பெண் விடுதலை என்று குறிப்பிட்டார். ’திராவிடர் கழகம் ஏன் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது? என்று கேள்வி கேட்டு, மனித னுக்கு மனிதன் தொடக்கூடாது; பார்க்கக்கூடாது என்று பிறவி பேதம் நிலவிய நாட்டில், தந்தை பெரியார் தான் ஏன் கூடாது என்று கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு, இந்த பேதம் கடவுளின் பெய ரால், மதத்தின் பேரால், புராண இதிகாசங்களின் பெயரால் நடைபெறுகிறது என்று பதி லாகச் சொல்லப்பட்ட போது, அனைத்தையும் எதிர்ப்பேன் என்று பெரியார் போராடிய தையும்,  ஜாதியை அரசமைப்புச் சட்டமும் பாதுகாக்கும் என் றால் அதையும் கொளுத்து வேன் என்று சொல்லி இந்திய ஒன்றிய வரலாறு காணாத ஒரு போராட்டமான 1957 இல் நடைபெற்ற அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்து நடத்தியதைப் பற் றியும் விளக்கமாகச் சொல்லி, அதனால் ஏற்பட்ட 18 உயிர் இழப்புகளையும் விவரித்து, அப்படிபட்ட தன்னலமற்ற ஈகியர்களுக்காகத்தான் திராவிடர் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறோம்" என்று தொடக்கத்தில் கேட்ட கேள் விக்கு பதிலளித்து, உரையை நிறைவு செய்தார். மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

நிகழ்ச்சியில் ஆவடி நகரத் தலைவர் இரா.முருகன், செய லாளர் இ.தமிழ்மணி, பூவை பகுதித்தலைவர் தமிழ்செல் வன், வஜ்ரவேல், பருத்திப்பட்டு சுந்தரராஜன், தமிழரசன், மாவட்டத் துணைத் தலைவர் கள் வேல்முருகன், கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முருகேசன், துணைச் செயலாளர் கார்த்தி கேயன், அம்பத்தூர் தோழர்கள் ரத்தினம், காயத்ரி, அரும் பாக்கம் தாமோதரன், மதுர வாயல் சரவணன், கொரட்டூர் ஜெயபால், பெரியார் ராஜேந் திரன், முரளி, கலைமணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சங்கர், உண்மை வாசகர் வட்டச் செயலாளர் சோபன் பாபு, பா. முத்தழகு, பழ.நல்.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்ட னர். பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நின்றிருந்த ஏராளமான பொதுமக்களும் கவிஞரின் உரையை செவி மடுத்தனர்.


No comments:

Post a Comment