லக்னோ, டிச. 20, உத்தரப்பிரதேச மாநிலம் புடானில் 17 வயது சிறுமியைக் காணவில்லை என்று காவல் துறையினருக்கு புகார் வந்தது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சிறுமியை தேடி வந்தனர். யாரும் சிறுமியை கடத்தினார்களா என்ற கோணத் தில் காவல் துறையினர் விசா ரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி, வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வயல் வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி யின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வயல் ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதா கவும், உடற் கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுமி, கொலை செய்யப்பட்டதாக அவரது உறவி னர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருவ தாக கூறிய காவல் துறையினர், உடற் கூராய்வு அறிக்கை வந்தவுடன் தெரியவரும் என்றும் கூறினர்.
Tuesday, December 20, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment