வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது ஒன்றிய அரசு உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது ஒன்றிய அரசு உறுதி

புதுடில்லி, டிச. 18, தேர்தல்களில் நேர்மை யான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக் கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. 

இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் சட்டங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள் ளப்பட்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி கள் நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு திட் டம் ஒன்றை கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் நடவடிக்கைகள் தொடர் பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பி னர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று (16.12.2022) பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விருப்பத்தின் பேரிலானது வாக்காளர்களின் அடையாளத்தை நிறுவும் நோக்கில், ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம்-2021 அனுமதி அளித்து உள்ளது. வாக்காளர் அடையாள அட்டையு டன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது. மேலும் சமீபத்தில் அறிமுகப்ப டுத்தப்பட்ட படிவம் 6பி-இல் ஆதார் அங்கீகா ரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்பு தல் பெறப்பட்டது. எனினும் ஆதார் விவரங் களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை.

54 கோடி பேர் விருப்பம்

அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலா னது. எனவே வாக்காளர் அடையாள அட் டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர் களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார். முன்னதாக மாநிலங்கள வையில் நேற்று முன்தினம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, 'நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்கா ளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித் துள்ளனர்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment