'நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கும் அவலம்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

'நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கும் அவலம்'

திண்டுக்கல், டிச. 19, நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேங்கி கிடக்கின்றன என்று உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.  திண்டுக்கல் வழக்குரைஞர் சங்கம் சார்பில், சட்ட கருத்தரங்கம் திண் டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (18.12.2022) நடந்தது. 

இதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணவேணி, மேனாள் அரசு தலைமை வழக்குரை ஞர் ஜோதி ஆகியோர் வழக்குரைஞர்களின் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.

கருத்தரங்கில் பங்கேற்ற மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- சட்டத்துறை தற்போது நலிவ டைந்து வருகிறது. இதற்கு போலி வழக்குரைஞர்களே காரணம். நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த வழக்குகள் விரைவாக முடித்து வைக்கப்பட வேண்டும் என்றால், முறையாக படித்து அனுபவம் பெற்ற வழக்குரைஞர்களாக இருக்க வேண்டும். போலி வழக்குரைஞர்களால் முடியாது. எனவே முறையாக சட்டம் படித்தவர்கள் மட்டுமே வழக்குரைஞர் தொழிலை பாதுகாக்க முடியும். 

தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகள் சிலவற்றில் வகுப்பறை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதேபோல் பேராசிரியர்களும் இல்லை. அங்கு மாண வர்கள் சேர்க் கையும் குறைவாகவே உள்ளது. ஆனால் ஆண்டுக்கு 300 முதல் 500 பேர் வரை சட்டப்படிப்பில் வெற்றி பெற்றவர்கள் என கூறிக் கொண்டு வருகின்றனர். இதுகு றித்து பார் கவுன்சில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தற்போதெல்லாம், குற்றவாளிகள் வழக்குரைஞர்களாக மாறி தங்களை பாதுகாக்கும் ஆயுதமாக இந்த தொழிலை பயன்படுத்து கின்றனர். 

140 நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால் வழக்குகள் பெருமளவு தேக்கமடையும். நீதிபதிகள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. இதுகுறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கேட்டால் அவர் சட்ட விதிகளுக்கு முரணாக பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment