2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்

புதுடில்லி, டிச 30 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “ஸிஜி-றிசிஸி” பரிசோதனை கட்டாயம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிவித்து உள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதி கரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்றின்  பிறழ்வான ஒமிக்ரானின் உருமாறிய வைரஸ் வகையான ஙி.தி.7  கரோனா தொற்று சீனா, அய்ரோப்பிய நாடுகள், அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.  

சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 15 சதவிகிதத்தினர்  B.F.7 வகையால் பாதிக் கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் இந்த கரோனா வெகு வேகமாக பரவி உச்சத்தை எட்டி யுள் ளது. மருத்துவமனைகளில் கரோனா வால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாகவும், உயிரிழந்தோர் சடலங்கள் பொட்டலங்களாக கிடப்ப தாகவும்  தகவல்கள் வெளியாகி வருகின் றன. இதையடுத்து இந்தியாவிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றியஅரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் விமான நிலையங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில்,   சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர்.பரி சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment