எமரால்டு கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி -2022 முடிவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

எமரால்டு கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி -2022 முடிவுகள்

தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்திய எமரால்டு கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தோம். 

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகள், இலங்கை, இலண்டன்,அமெரிக்கா என உலகின் பல பகுதிகளில் இருந்தும் சிறுகதைகள் வரப்பெற்றோம். உற்சாத்தோடு கலந்து கொண்டு போட்டிக்கு தாங்கள் எழுதிய சிறுகதைகளை அனுப்பி வைத்த எழுத்தாளர்கள் அனை வருக்கும் முதலில் நன்றியும் பாராட்டுகளும். பரிசு பெற்ற,சிறுகதைகளையும்,வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளையும் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

முதல் பரிசு  பெறும் கதை:

சுயமரியாதை 

கதை ஆசிரியர் கி.தளபதிராஜ், மயிலாடுதுறை

இரண்டாம் பரிசு  பெறும் கதை:

அமைதிக் குளத்தில் எறியப்பட்ட சொல் 

கதை ஆசிரியர்  மலர்விழி அன்புவேல்,பெங்களூர்.

மூன்றாம் பரிசு  பெறும் கதை

இனவாதம் 

கதை ஆசிரியர் முனைவர் நடராஜா ஜெயரூபலிங்கம், இங்கிலாந்து.

வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட 

10 சிறுகதைகள்

1. கடன் - கதை ஆசிரியர் நா.ச. லூர்து ராஜ், சோஹார், ஓமான்.

2 உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு  - கதை ஆசிரியர்...சிக.வசந்தலெட்சுமி தஞ்சாவூர்

3. அவள் மனம் - கதை ஆசிரியர்  ம.வீ.கனிமொழி, அமெரிக்கா.

4. அன்புடைமை  - கதை ஆசிரியர் என்.நித்யா, திருப்பூர்.

5. கல் பாறையில் ஒரு காதல் பூ... - கதை ஆசிரியர் எஸ்.இராமன், சென்னை.

6. அசையாச் சொத்து - கதை ஆசிரியர் தி.அனிதாதாரணி, குடியாத்தம்

7. அப்பா யாரு? - கதை ஆசிரியர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி.

8. அசை - கதை ஆசிரியர் சந்துரு மாணிக்கவாசகம், சென்னை.

9. பிசிறு - கதை ஆசிரியர் க.அருள்மொழி, குடியாத்தம்

10. பலி  - கதை ஆசிரியர்  ச.மணிவண்ணன், துறையூர்.

விருப்பு, வெறுப்பின்றி நடுவர்களாகச் செயல்பட்டு பரிசுக் குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்! கதைகள் உண்மை இதழில் வரும். புத்தகமாக வெளிவரும்.பரிசு அளிப்பு நடைபெறும் நாளும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும்.

முனைவர் வா.நேரு 

தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

கோ.ஒளிவண்ணன், சுப.முருகானந்தம், ம.கவிதா

துணைத்தலைவர்கள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

No comments:

Post a Comment