இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் கிரீன் மெட்ரிக் தரவரிசை - 2022 பட்டியலில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் முன்னிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் கிரீன் மெட்ரிக் தரவரிசை - 2022 பட்டியலில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் முன்னிலை

ஒவ்வொரு ஆண்டும் இந்தோனேசியா பல்கலைக் கழகம் (UI) பசுமை வளாகம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை நடைமுறைகளை பராமரிப்பதில் சிறந்த பல்கலைக் கழகங்களை தரவரிசைப்படுத்துகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 1050 பல்கலைக் கழகங்களில் தரவரிசைப்படுத்தும் நோக்கத்தில் இந்தோனேசியா பல்கலைக்கழகம் கிரீன் மெட்ரிக் தரவரிசைப் பட்டியல் வெளிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 38 பல்கலைக் கழகங்கள் இந்த கிரீன் மெட்ரிக் உலக தரவரிசையில் பங்கேற்றன. இதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலகளவில் 621 ஆவது இடத்தையும், தேசிய அளவில் 25ஆவது இடத்தையும், தமிழ்நாட்டில் 6 ஆவது இடத்தையும் பெற்று சிறப்புப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment