பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு

போடி,டிச.28- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால்  விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் நேற்று (டிச.27) காலை 10 மணி நிலவரப்படி 142 அடியாக  உள்ளது. அணைக்கு  762 அடி கன அடி நீர்வரத்து  வருகிறது.  அணையில் இருந்து தமிழ்நாட்டுப் பகுதிக்கு  திறக்கப்படும் நீரின் அளவு 750 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  இடுக்கி மாவட்டத்திற்கு இறுதி கட்ட  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 142 அடி எட்டிய நிலையில் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை  பொதுப்பணித்துறை அதிகாரிகளால்  விடுக்கப்பட்டு உள்ளது. 142 அடியை தேக்கிய பின், தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் தொடர்  கண்காணிப்பில் உள்ளனர். 5ஆவது முறையாக, 142 அடி தண்ணீர்  தேக்கப்பட்டுள்ளதால்,  விவசாயிகளிடம்  மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையில் நேற்று முன் தினம் (26.12.2022) இரவு பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.


No comments:

Post a Comment