அனுமான் ஜெயந்திக்காக நாமக்கல் கோயிலில் 1,00,008 வடைகள் தயாரிப்பாம்! யார் வயிற்றில் அறுத்துக் கட்ட? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

அனுமான் ஜெயந்திக்காக நாமக்கல் கோயிலில் 1,00,008 வடைகள் தயாரிப்பாம்! யார் வயிற்றில் அறுத்துக் கட்ட?

நாமக்கல்,டிச.20- கடவுளர் களுக்கு பிறப்பு இறப்பு இல்லை என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, ராமன், பிள்ளையார், என்கிற வரிசை யில் குரங் கையும் கடவுளாக்கி, அதற்கும் பிறந்த நாள் விழா என்கிற பெயரில் கோல்களில் விழா நடத்தப்பட்டு வருகிற தாம். 

மக்களை அறியாமை இரு ளில் தள்ளிவிட்டு, பகுத்தறிவு டன் சிந்திக்க விடாமல் காலம் காலமாக பழக்கம், வழக்கம் என்பதன் பெயரால் கோயில்களில் விழாக்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், அனுமன் பிறந்த நாள் விழா என்பதன் பெய ரால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயி லில் 1 லட்சத்து 8 வடைகளைக் கொண்ட மாலை அணிவிக்கப்படுகிற தாம். அதற்காக ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிப்பு பணி தொடங் கியது.

நாமக்கல் கோட்டை சாலையிலுள்ள ஆஞ்நேயர் கோயிலில் அனுமனுக்கு பிறந்த நாள் என்பதன் பெய ரால் ஆண்டு தோறும் 1 லட்சத்து 8 வடைகளைக் கொண்ட மாலை அணிவிக்கப் பட்டு வருகிறதாம்.

இந்தாண்டு வரும் 23ஆம் தேதி அவ்விழா நடைபெறு வதையொட்டி, அன்று அதி காலை 5 மணிக்கு சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட வுள்ளது. இதற்காக வடைகள் தயாரிப்பு பணி கோயில் வளா கத்தில் உள்ள மண்டபத்தில் தொடங்கியது.

இப்பணியில் திருச்சி சிறீ ரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமை யிலான 32 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சிறீரங்கம் ரமேஷ் கூறியதாவது

அனுமன் ஜெயந்திக்காக 1 லட்சத்து 8 வடை தயாரிக்க 2,025 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், தலா 32 கிலோ மிளகு, சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளதாம்.

இப்பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடை பெறும். இப்பணி வரும் 22ஆம் தேதி காலை நிறைவடையும். 

பின்னர் கயிற்றில் மாலை யாக கோர்க்கும் பணி நடை பெறும் என்றார்.

No comments:

Post a Comment