ஆதார் எண் போல் தமிழ்நாட்டின் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் அய்டி எண் : தமிழ்நாடு அரசு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

ஆதார் எண் போல் தமிழ்நாட்டின் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் அய்டி எண் : தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை, டிச. 28, ஒன்றிய அரசு ஆதார் எண் வழங்கியிருப்பது போலத் தமிழ்நாடு அரசு மக்கள் அய்டி என்ற எண்ணை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

மாநில அரசின் மூலம் அறிவிக் கப்படும் பல்வேறு திட்டங்களை இந்த அய்டி எண் மூலம் ஒருங்கி ணைக்கவும் செயல்படுத் தவும் அரசு திட்டமிட்டு இருப்ப தாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் குடிமக்கள் ஒவ்வொ ருவருக்கும் ஒன்றிய அரசு ஆதார் எண் வழங்கியுள்ளது, அரசின் திட் டங்கள் ஒவ்வொன்றும் ஆதார் எண்ணை மய்யமாக வைத்துச் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல நம் மாநில அரசு தமிழ்நாடு மக்களுக்கு எனத் தனியாக மக்கள் அய்டி என்ற 10 முதல் 12 இலக்க எண்களை அறி விக்க உள்ளது.ஆதார் போலத் தமிழ்நாடு மக்களுக்குத் தனி அய்டி உருவாக்கத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் உள்ள மக்கள் தொகையைக் கணக் கெடுத்து மாநில குடும்ப தரவுத் தளம் உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் வசிக்கும் மக் களை வயது பாலினம் சமூக அடிப் படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்க அய்டி எண்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மக்கள் அய்டி என அழைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சகம் இதற் கான பணியைத் தொடங்கி உள் ளது. தரவுகளைச் சேகரித்து இதற் கான தளத்தை நிர்வகிக்கத் திறமை யும் அனுபவமும் உள்ள நிறுவ னங்கள் விண்ணப்பிக்கலாம் என் றும் அரசு ஒப்பந்தப் புள்ளி கோரி யுள்ளது. 

மக்கள் அய்டி மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகை யைத் துல்லியமாகக் கணக்கிடவும், அரசின் திட்டங்களை இந்த அய் டி எண்ணைப் படியாக வைத்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment