உலக அறிவியல் தினத்தை ‘துளிர்' வாசகர் திருவிழாவுடன் கொண்டாடிய அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

உலக அறிவியல் தினத்தை ‘துளிர்' வாசகர் திருவிழாவுடன் கொண்டாடிய அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவர்கள்!

கந்தர்வகோட்டை நவ. 11 கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் க.தமிழ் செல்வி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் அ.ரக மதுல்லா அனைவரையும் வரவேற்றார்.

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார். துளிர் வாசகர் திருவிழாவின் நோக்கம் குறித்து அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார்  பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துளிர் வாசகர் திருவிழாவை கல்வியாளர் முனை வர் என்.மாதவன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது மாணவர்கள் துளிர் இதழில் தொடர்ந்து வெளிவரும் அறிவியல் கட்டுரைகள் மாணவர் களுக்கு மிகுந்த பயன் தரக்கூடியது எனவும், பள்ளியில் பயிலும் மாணவர்களும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் எழுதலாம் எனவும் கூறினார். மேலும் மாணவர்களின் மூளை செயல்பாடுகள் பற்றியும், அனிச்சை செயல் பற்றியும் மாணவர் களுக்கு விளக்கி பேசினார். 

தொடர்ந்து மாணவர்கள் உலக அறிவியல் தினம் சார்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு பதி லளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 

யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவியலை உலக அளவில் கொண்டு செல்ல - உலகில் ஏற்பாடும் பிரச்சினைகளை மக்களுக்குத் தெரிவிப்பதிலும் அறிவியல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி துளிர் திறனறி தேர் வில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர் களுக்கு சான்றிதழை வழங்கி, சோதனைகள், அறிவியல் விளையாட்டுகளை எளிமையாக அறிமுகப்படுத்தினார்.

துளிர் வாசகர் திருவிழாவை மாநிலச் செய லாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில்   மருத்துவர் சுவாமிநாதன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். மாவட்டத் தலை வர் ம.வீரமுத்து, தொல்லியல் ஆய்வுகழக நிறு வனர் ஆ.மணிகண்டன்,மாவட்ட இணைச் செய லாளர் துரையரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் சிவனாந்தம் பாடல்கள் பாடி மாணவர்களை  உற்சாகப்படுத்தினார்.

துளிர் வாசகர் திருவிழாவில் மாணவர்கள் முகேஷ்வரன், தீப்தா, அரவிந்த், தேவசிறீ, ரித்திஸ் குமார், சக்தி ஆகியோர் துளிர் இதழை வாசித்து நூல் விமர்சனம் செய்தனர். 

மாணவர்கள் துளிர் இதழில் அறிவியல் கட்டுரைகள், தமிழ்நாட்டில் புலி, வேங்கைப்புலி சில அம்சங்கள், இந்தியாவின் செயற்கை மகள், புழு மருத்துவம், யாருக்கு கிடைத்தது பதக்கம் உள்ளிட்ட தலைப்புகளை மாணவர்கள் விமர்சனம் செய்தனர். மாணவர்கள் தங்களுடைய படைப்பு களை துளிர் ஆசிரியரிடம் சமர்ப்பித்தனர். இந் நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவி வேதநாயகி, வார்டு உறுப்பினர் கலா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்நிழ்விற்கான  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், செல்வி ஜாய், வெள் ளைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment