மத மோதலைத் தூண்ட முயன்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

மத மோதலைத் தூண்ட முயன்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்

பெங்களுரு, நவ 14 தாவண கெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ரேணு காச்சார்யா. இவர் கருநாடக முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராகவும் உள்ளார். இவரது தம்பி மகன் சந்திரசேகர்.

 இவர் ரேணுகாச்சார்யாவுக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி சந்திரசேகர், சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கவுரிகத்தே கிராமத்துக்கு வந்து வினய் குருஜி என்ற சாமியாரைச் சந்தித்து பேசினார்.

பின்னர் காரில் திரும்பிச் சென் றார். அப்போது ஒன்னாளி அருகே துங்கா கால்வாயில் அவரது கார் பாய்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி சந்திரசேகர் உயிரிழந்தார்.

 இதுகுறித்து ஒன்னாளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதற்கிடையே, சந்திரசேகர் சிறுபான்மைவகுப்பினரால்  கொலை செய்யப்பட்டார் என்று சட்டமன்ற உறுப்பினர் ரேணு காச்சார்யா கூறி வந்தார். இது தொடர்பாக ஒன்னாளி காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சந்திரசேகரின் உடற்கூராய்வு அறிக்கை  வெளி யானது. அதில், சந்திரசேகர் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடித்ததால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால், கால்வாய்க்குள் கார் பாய்ந்ததும் அவர் போதை யில் இருந்த காரணத்தால் வெளியே வர முடியாமல், உயிரி ழந்திருக்கலாம் என காவல்துறை யினர் கருதுகிறார்கள். மேலும் இந்த வழக்கில் 40 பக்க குற்றப்பத்திரிகையும் காவல் துறையினர் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், சந்திரசேகர் காரை அதிவேகமாக ஓட் டியதும், அவர் போதையில் இருந்தத னால் விபத்து ஏற்பட்டு கால்வாயில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் குறிப்பிட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 சாமியாரைச் சந்தித்த அவர் அங்கு மதுஅருந்தி உள்ளார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.


No comments:

Post a Comment