திருப்பத்தூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

திருப்பத்தூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக அதிக  ‘விடுதலை' சந்தாக்கள் வழங்க முடிவு

திருப்பத்தூர்,நவ.16- நவம்பர் 14 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பில் நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில்  கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 பிறந்த நாள் விழா, சுயமரியாதைச் சுட ரொளி ஏ.டி.கோபால் அவர்களின் நூற்றாண்டு விழா, விடுதலை சந்தா இரண்டாம் தவணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது 

2. விடுதலை சந்தா  இரண்டாம் கட்டமாக 1000  சந்தாக்களை சேர்த்து வழங்குவது. 

3. ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நவம்பர் 28 இல் திருப்பத்தூர் திராவிடர் கழகம் சார்பில் கந்திலி ஒன்றியத்தில் நடத்துவது . 

4. விழா குறித்து சுவர் எழுத்து விளம் பரங்கள், நகரம், ஒன்றியங்களில் விளம்பர பதாதைகள் வைப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாள் விழாவை நடத்துவது நம் மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் வாய்ப் பாகவும், பெருமையாகவும் கருதி  தோழர்கள் அனைவரும்   விழாவை சிறப்பாக நடத்திக் காட்டும் வகையில்  அதை குறித்து தங்களின் ஆலோசனைகளையும்,  ஆசிரியருக்கு பிறந்த நாள் பரிசாக அதிக ‘விடுதலை' சந்தாக் களை சேர்த்து வழங்க வேண்டும் என்று  உறுதியையும் எடுத்துக்கொண்டனர். 

இக் கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கலை வாணன், மாநில மண்டல இளைஞரணி செய லாளர், எ.சிற்றரசன், மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம் எம்.என்.அன்பழ கன், மாவட்ட துணைத் தலைவர் தங்க அசோகன், மாவட்ட ப.க. தலைவர் சி.தமிழ்ச் செல்வன்,  மாவட்ட அமைப்பாளர் தொழிலா ளரணி, கந்திலி ஒன்றிய தலைவர் கே.மோகன் கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் நாக ராசன், புகழேந்தி நகர செயலாளர், மகளிரணி தாமரை கனி, மாவட்ட இளைஞரணி தலை வர் எம். சுரேஷ் குமார் மற்றும்  கழகத் தோழர்கள் பங்கு கொண்டு  விழா ஏற்பாடுகள் குறித்து தங்களின் ஆலோசனைகளை வழங் கினர்.

No comments:

Post a Comment