எலிக்காய்ச்சல் நோய் அதிகரிப்பு - சென்னையில் ஆய்வகம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

எலிக்காய்ச்சல் நோய் அதிகரிப்பு - சென்னையில் ஆய்வகம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்தார்

சென்னை, நவ 13 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குநரகத்தில், எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பை ரோஸிஸ்  ஆய்வகத்தை மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்தியாவில் 10 இடங்களில் உள்ள லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தற்போது அரசு சார்பில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எலிக் காய்ச்சலை கண்டறிய எலிசா என்ற பரிசோதனை உதவிய நிலையில் இனி, லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் உதவியாக இருக்கும். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் எலிக் காய்ச்சலால் சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்டவை பாதிக்கும். இந்தியா வில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் 10 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்படு கின்றனர். 

மழைக்காலத்தில் வெறும் காலில் காலணி இல்லாமல் நடந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு வருகிறது. சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல், கண் சிவத்தல் ஆகியன எலிக் காய்ச்சலுக்கான அறிகுறி. அறிகுறி தென்பட்டவுடனேயே சிகிச்சை எடுத்து கொண்டால், பாதிப்பு இருக் காது என அமைச்சர் கூறினார்.


No comments:

Post a Comment