தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு போராட்டம்!

 கூடங்குளம் அணுமின் நிலையம்:

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை தருக!

திருநெல்வேலி, நவ.15 கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி, சட்டப் பேரவைத் தலை வர் மு.அப்பாவு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இதற்காக 136 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளின் அடிப் படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இங்கு ‘சி' மற்றும் ‘டி' பிரிவில் பணியாற்றுவதற்கு உள்ளூரைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், அணு மின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர் களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சில இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலா ளர்களாக வேலை செய்து வருகின்றனர். 

இதுதொடர்பாக அந்த ஒப்பந்த நிறுவனத் தினர் மீது கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த 25 தொழிலாளர்களையும் ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அறிவித்தனர்.  தொடர்ந்து ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தின்போது, ஒரு வாரத்துக்குள் தொழி லாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதாக அணுமின் நிலைய அதிகாரிகளும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரும் தெரிவித்தனர். ஆனால், இதுவரையிலும் தொழிலாளர் களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை. இதனை அறிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களு டன் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சென்றனர். அங்கு அணுமின் நிலைய வளாக இயக்குநர் பிரேம்குமாரிடம் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  சட்டப் பேரவைத் தலைவர் 

மு.அப்பாவுவை தொடர்பு கொண்டு பேசி னார். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் மீண்டும் பணி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொழிலாளர்களுடன் அங் கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனமானது 100 சதவிகித ஊதியத்தில் 40 சதவிகித்தை கையாடல் செய்து, மீதியுள்ள தொகையையே வழங்குவதாக 25 தொழிலா ளர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு அணு மின் நிலைய அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment