சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் கட்டப்பட்டது அல்ல அமைச்சர் பி.கே.சேகர்பாபு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் கட்டப்பட்டது அல்ல அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை,நவ.11- சென்னை யில் நேற்றுமுன்தினம் (9.11.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகை யில், “இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் தவறாக இருந்தால் சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரலாம். எங்களுடைய ஒவ்வொரு அடியையும் சரியாக பார்த்து, அளந்து அளந்து எடுத்து வைத்து வருகிறோம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உரு வாக்கப்பட்டது அல்ல, மன்னர் களால், நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. கோவில் வருமானங்களை முறையான கணக்கு கேட்கின்ற போது கணக்கு காட்டுவது தீட்சிதர் களின் கடமை. நிர்வாக குளறு படிகளை கேள்விகளாக கேட் கின்ற போது பதில் அளிப்பது அவர்களுடைய கடமை.

திருக்கோயிலின் உள்ளே மானாவாரியாக அவர்கள் இஷ்டத்திற்கு கட்டடங்களை கட்டி உள்ளனர். எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய கட்டடங்களின் நிலை குறித்து கேள்வி கேட்பது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை.

அந்த கோயிலின் சொத் துக்கள், நகைகள் ஆகியவற்றின் நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலைத்துறையின் கடமை. அதற்கு முழு ஒத்து ழைப்பு வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. எங்கள் பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.” என கூறினார்.

மேலும் இதுகுறித்து தீட்சி தர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளதாகவும் இதில் எந்த விதமான அத்துமீறலோ வரம்பு மீறலோ இல்லை எனவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment