பொருளாதார சீர்திருத்தங்களுக்காக மன்மோகன்சிங்கிற்கு இந்தியா கடன்பட்டுள்ளது : நிதின்கட்கரி புகழாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

பொருளாதார சீர்திருத்தங்களுக்காக மன்மோகன்சிங்கிற்கு இந்தியா கடன்பட்டுள்ளது : நிதின்கட்கரி புகழாரம்

புதுடில்லி, நவ.11 மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்காக இந்தியா அவருக்கு கடன்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி டில்லியில் டேக்ஸ் இந்தியா இணையம் சார்பில் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 1991ஆ-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார சீர்திருத்ததை தொடங்கி வைத்து, தாராளமய மாக்கல் கொள்கையை இந்தி யாவுக்கு கொண்டு வந்தது புதிய பாதையை காட்டினார். 

இந்தியாவில் ஏழை மக்க ளுக்கு பலனளிக்கும் நோக்கத் துடன் தாராள பொருளாதார கொள்கை தேவை. கடந்த 1990 களின் நடுப்பகுதியில் மராட்டிய மாநில அமைச்சராக இருந்த போது, மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்கினால் தொடங்கப்பட்ட பொருளா தார சீர்திருத்தங்கள் காரணமாக மராட்டியத்தில் சாலைகள் அமைக்க பணம் திரட்ட முடிந் தது. தாராளமய கொள்கை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் என்பதற்கு சீனா போன்ற நாடுகள் சிறந்த உதாரணமாகும். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, இந்தியாவுக்கு அதிக முதலீடு தேவைப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment