வாரிசு அரசியலைப் பற்றி பா.ஜ.க. பேசலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

வாரிசு அரசியலைப் பற்றி பா.ஜ.க. பேசலாமா?

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்கள் அனைவருமே பா.ஜ.க. பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து வாரிசுகளையே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் பாஜக தமிழ்நாட்டில் இளம் பருவத்தில் இருந்தே அரசியல் களமாடி  வரும் தி.மு.க. தலைவரைப் பார்த்து வாரிசு அரசியல் என்று கொக்கரிக்கிறதே!

ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள், சில முக்கியமான உண்மைகளைக் கூறு கின்றன.  ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரின் குடும்பத் தைச் சார்ந்தவரையே  பா.ஜ.க. இடைத் தேர்தலில் களமிறக்கி உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. ஏழு தொகுதி களில் 4 இல் வென்றிருக்கிறது ஆர்.ஜே.டி., டி.ஆர்.எஸ்., சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய மாநிலக் கட்சி கள் தலா ஒரு தொகுதி வீதம் 3 தொகுதிகளில் வென்றுள்ளன.

உ.பி. கோலா கோகரன்நாத் தொகுதி யில் பா.ஜ.க.  சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்கிரி மரணமடைந்ததால் நடை பெற்ற இடைத்தேர்தலில் அவரின் மகன் அமன் கிரியையே வேட்பாளராக நிறுத்தியது 

ஒடிசாவில் தாம்நகர் தொகுதியில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணு சேதி மரணமடைந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரின் மகன் சூர்யவன்ஷி சுராஜை வேட்பாளராக நிறுத்தியது 

பீகாரில் கோபால்கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்சுபாஷ் சிங் மரணத்தால் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது மனைவி குசும் தேவியையே வேட்பாளாராக்கியது.

 அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் பிஷ் ணோய் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க. வில் சேர்ந்து பதவி விலகினார். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் பவ்ய பிஷ்ணோய் பா.ஜ.க. வேட் பாளராகப் போட்டியிட்டார்.

இடைத்தேர்தல்களில் புதிய நபர் களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க.விற்குத் துணிவில்லை. இப்படி வாரிசுகளை நிறுத்தி எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி பின்வாங்கச்செய்து வெற்றி வாய்ப்பை பெறும் பா.ஜ.க.வினரும். அதன் தமிழ்நாடு தலைமையும் வாரிசு அரசியல் குறித்து பேசுவதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவர்களாவர்.


No comments:

Post a Comment