திருப்பூரில் தமிழை மறைத்து ஹிந்தியில் பெயர்ப் பலகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

திருப்பூரில் தமிழை மறைத்து ஹிந்தியில் பெயர்ப் பலகை

திருப்பூர், நவ. 29 திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழை மறைத்துவிட்டு ஹிந்தி மொழியில் பெயர் பலகை வைக் கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகிறார்கள்.  திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மய்யத்தில் தமிழ் மொழியில் 'சேவை மய்யம்' என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அந்தப் பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ், ஒன்றாக எழுதப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் என்று பெயர்ப்பலகையில் ஹிந்தி எழுத்தால் 'சகயோக்' என பெரிதாக எழுதி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் 'இன்பர்மேசன் சென்டர்' என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் 'சகயோக்' எனவும் தமிழில் 'சேவை மய்யம்' என்பதற்கு பதிலாக தமிழ் எழுத் தால் 'சகயோக்' என்றும் எழுதப்பட் டுள்ளது. இதை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் 'சகயோக்' என்றுதான் வாசிக்க முடியும்.

 தமிழ் மறைப்பா? 

இதே போன்று இந்த சேவை மய்யத்தின் அருகில் காசி சங்கமம் என்ற பெரிய விளம்பரப் பதாகையில் அனைத்தும் ஹிந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன? தமிழ் மறைப்பா? ஹிந்தி திணிப்பா? யாருக்கும் புரிய வில்லை. பயணிகள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.


No comments:

Post a Comment