மழை வெள்ளம்: வேகமான நடவடிக்கைகள் படகுகள் மூலம் மக்கள் மீட்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

மழை வெள்ளம்: வேகமான நடவடிக்கைகள் படகுகள் மூலம் மக்கள் மீட்பு!

மாங்காடு,நவ.14- முகலிவாக்கத்தில் வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. வெள்ளத் தடுப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் போரூர் அருகே உள்ள முகலிவாக்கம் திருவள்ளூர் நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  இதனால் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ள இப்பகுதி முழுவதும் இடுப்பளவு தண்ணீர் வெளியேறமுடியாமல் தேங்கி இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், வீட்டு உபயோகப் பொருட்கள் நீரில் நனைந்து வீணாகியுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற பூந்தமல்லி, வில்லிவாக்கம், மதுரவாயல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 12.11.2022 அன்று இரவு முழுவதும் அந்தப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மழை நீர் வெளியே செல்லும் அளவிற்கு பணிகள் நடைபெறவில்லை. இதனால் இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. இதை நாங்கள் சரிசெய்து கொடுக்க அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து படகு வசதி, பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப் பட்டு வருகிறது. தண்ணீர் வடிந்துவிட் டால் மின்சாரம் கொடுப்பதாக அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்" என்றனர். 

மாங்காட்டில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை படகுகள் மீட்கும் தீயணைப்பு வீரர்கள்முகாம்கள் இல்லாததால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்துள்ளனர். தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சக்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் தொடர்ந்து இரண்டு நாட்களாக சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந் துள்ளனர். 

இந்த நிலையில் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலையின் ஓரங்களில் இருந்த கால்வாய்கள் உடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் வழியாத மழை நீரில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் வீட்டில் உள்ளவர்களை மீட்டனர். 

No comments:

Post a Comment