டோல் கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க? தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

டோல் கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க? தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்!

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் கவனத்திற்கு..

நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் (NHAI) செல்லும் போது கொடுக்கும் பணம் டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டுமல்ல.

பிறகு வேறெதற்கு? என்கிறீர்களா?

சுங்கச் சாவடியைக் கடக்கும் போது. வாகனத்துக்கு ஏற்ப பணத்தை கட்டி ரசீது பெற்றுக் கொள்வோம். அதை பத்திரமாக வைத்து கொள்ளவும். எதற்கு என்றால்..

உங்கள் பயணம் எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவும், அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்துதான் அந்தப் பணம் செலுத்துகிறோம்.

காரில் செல்பவர்கள் யாருக்காவது

1. மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் செல்போன் எண் பதிவாகியிருக்கும். அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வரும்.

2. வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது 

பஞ்சர் ஆகிவிட்டாலோ அதற்கு இன்னொரு நம்பர் இருக்கும். அதற்குப் போன் செய்தால் பத்து நிமிடத்தில் உங்களுக்காக வந்திடுவார்கள், வந்து பஞ்சர் போட்டு கொடுத்திடுவார்கள். இது அவர்களின் கடமையாகும்.

3. பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால், தகவல் சொன்னால் அய்ந்து லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதற்குண்டான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் சேர்த்துத்தான் நம்ம கிட்ட சுங்கக் கட்டணம் வசூல் பண்றாங்க. இந்த விஷயம் நிறைய பேருக்குத் தெரியாமல் ஏதாவது பிரச்சினை ஆனால் தவித்துப் போகிறார்கள், மன உளைச்சலாகிறார்கள். இந்தச் செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்.


No comments:

Post a Comment