“பின்நகரும் காலம் - தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து” அமைச்சர் க.பொன்முடி தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

“பின்நகரும் காலம் - தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து” அமைச்சர் க.பொன்முடி தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வுரை

சென்னை, நவ.13 தெற்காசியாவிலேயே மிகவும் பழைமையான ஆவணக்காப்பகமாக “தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை” விளங்குகிறது. ஆவணக்காப்பகத்தில் கி.பி.1670 ஆம் ஆண்டு முதல் ஆவணங்கள் தொகுத்து வைக்கப்பட் டுள்ளன. ஆவணக்காப்பகத்தின் ஆய்வு செயல்பாடுகளில் ஒன்றாக மாதந்தோறும் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன. சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிகழ்வு இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று நடைபெறவுள்ளது.

15.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 05.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கத்தில் டாக்டர் பழனி நி. பெரியசாமி அறக்கட் டளையின் சொற்பொழிவு   நடைபெறவுள்ளது.   உயர் கல்வித்  துறை  அமைச்சர் முனைவர் க.பொன்முடி   தலைமையுரை ஆற்றுவார்.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் “பின்நகரும் காலம் - தமிழக தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து” என்னும் தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அரசு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் முனைவர் தா. கார்த்திகேயன்   முன்னிலை வகிப்பார்கள்.

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் கோ. பிரகாஷ்,  சார்பாக தமிழியல் ஆய்வு மாணவர்களும், பேராசிரியர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment