வேளாண் தொழில் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

வேளாண் தொழில் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு

சென்னை, நவ. 9- இந்தியாவில் விவசாயத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும் டிராக்டர் உற்பத்தியில் முன்னிலை வகிக் கும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொண்ட ‘ஹெவி டூட்டி தமாக்கா’ வாகன விற்பனை முயற்சி மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பெருமளவு நன்மை அடைந்தனர்.

இந்தப் புதிய சாதனை குறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், “அக்டோபர் மாதத்தில் மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டியதோடு மிக அதிகபட்சமாக 20 ஆயிரம் டிராக்டர்களை நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். அத்துடன் டிராக்டர் துறையின் வளர்ச்சி எதிர்பார்ப்பான 7 சதவீதத்தைக் காட்டிலும், இரு மடங்கிற்கும் அதிகமான 16 சதவீத வளர்ச்சியை நாங்கள் எட்டியுள்ளோம். அதிகபட்ச வளர்ச்சியை எட்டுவதற்கு திட்டமிட்டோம்; அதை 100% எட்டி வெற்றியும் கண்டுள் ளோம். எங்க ளது அனைத்துத் தரப்பு பணியாளர்களின் அதிகபட்ச உழைப்பினால்தான் இந்தச் சாதனை சாத்தியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment