குமரியில் ‘பெரியார் 1000' வினா விடைப் போட்டி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

குமரியில் ‘பெரியார் 1000' வினா விடைப் போட்டி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி, நவ.2 குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில்  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்  சார்பாக  பெரியார் 1000 வினா விடைப்  போட்டி  சிறப்பாக நடந்தது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்று  ஆர்வமுடன் தேர்வு எழுதினர். 

இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா  நாகர்கோவில் பிரான்சிஸ்  மேல்நிலைப் பள்ளி கண்கார்டியா  உயர் நிலைப்பள்ளி, அய்.இ.எல்.சி. பப்ளிக் பள்ளிகளில்  வைத்து நடைபெற்றது  மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பள்ளி களுக்கு  நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் 

உ.சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பொன் னுராசன், தொழிலாளரணி செயலாளர் கருணாநிதி  இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் ஆகி யோர் முன்னிலை  வகித்தனர்.  

கழக மாவட்ட செயலாளர் கோ வெற்றி வேந்தன் , விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜே.ரி.ஜூலியஸ், முத்துவைரவன்  பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவ,  மாண வியர்களுக்குப் பரிசுகளாக மாவட்ட கழகம் சார்பாக பரிசுத் தொகை, பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன.

பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல் கலைக்கழகம்  சார்பாக மாணவர்களுக்கு  சான்றி தழ்கள், பதக்கங்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளுக்குப் பெரியார் படங்கள் வழங்கப் பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர்கள்  நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்தனர்.


No comments:

Post a Comment