பாஜகவில் சேர வற்புறுத்துதல் முதலமைச்சர் பதவி தருவதாக பேரம் சிபிஅய்மீது டில்லி துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

பாஜகவில் சேர வற்புறுத்துதல் முதலமைச்சர் பதவி தருவதாக பேரம் சிபிஅய்மீது டில்லி துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு

புதுடில்லி,அக்.19- மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது சிபிஅய். டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டில்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டில்லி பல மண்டலங் களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங் களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல் வேறு தரப்பில் இருந்து விமர்ச னங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மது பானக் கொள்கையை டில்லி அரசு திரும்பப் பெற்றது.

இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத் தியதில் பெரும் முறைகேடு நடந் துள்ளதாக டில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது ஒன்றிய புலனாய்வுத் துறை (சிபிஅய்), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம் (17.10.2022) காலை சிசோடியா ஆஜரானார். அவரிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தி யது சிபிஅய். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந் தித்த சிசோடியா சிபிஅய் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதன்படி, விசாரணையின் போது சிபிஅய் தரப்பில் தான் ஆம் ஆத்மியில் இருந்து வெளி யேறி பாஜகவில் சேர வற்புறுத் தப்பட்டதாகவும், அதற்காக முதலமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும், அதை மறுத்தால் இதுபோன்ற வழக்குகள் என் மீது தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்றும் சிபிஅய் மிரட்டியதாக குற்றம் சாட்டினார்.

மேலும், சத்யேந்தர் ஜெயின் மீதான உண்மை வழக்குகள் என்ன என்றும் என்னிடம் கேட் கப்பட்டது. ஆனால் மிரட்ட லுக்கு அடிபணிய மாட்டேன் என்றும் ஆம் ஆத்மியை விட்டு பாஜகவுக்கு வரமாட்டேன்  என்றும் சிபிஅய்யிடம் தெரிவித்தேன் என்றும் சிசோடியா கூறினார்.

சிசோடியாவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை வெளியிட்ட சிபிஅய், அதை திட் டவட்டமாக மறுத்ததுடன், "சட்டப்பூர்வ முறையில் அவ ரிடம் விசாரணை நடத்தப்பட் டது. எப்அய்ஆர் குற்றச்சாட்டுகள் மற்றும் இதுவரை சேகரிக்கப் பட்ட ஆதாரங்கள் குறித்தே அவரிடம் விசாரிக்கப்பட்டது. அவரது வாக்குமூலம் சரிபார்க்கப் படும். மீண்டும் சட்டப்படியே விசாரணை தொடரும். விசா ரணை தேவைகளின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment