கடவுள் சக்தி இவ்வளவுதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

கடவுள் சக்தி இவ்வளவுதானா?

சூரிய, சந்திர கிரகண நேரங்களில் திருப்பதி கோவில் 12 மணிநேரம் அடைப்பாம்

திருமலை,அக்.13- சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற் படுவதற்கான அறிவியல் விளக்கங்கள் உள்ளன. அதே நேரத்தில் கிரகண நேரத்தில் பக்தியின் பெயரால் மூடத்தனங்கள் பரப்பப்பட்டு வரு கின்றன. கிரகண நேரத்தில் வெளியில் வரக்கூடாது என்று கர்ப்பிணிகளுக்கு தடைபோடுவது, கிரகண நேரத்தில் எவரும் உணவு உட்கொள்ளக்கூடாது என்றெல்லாம் மூடத்தனங்கள் மக்களிடையே திணிக்கப்பட்டுள்ளன. அதனை முறியடிக்கும் வித மாக திராவிடர் கழகம் சார்பில் கிரகண நேரத்தில் உணவு உட்கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்வு களும் நடந்து வருகின்றன. அந்நிகழ்வில் கருவுற்ற பெண்கள் துணிவுடன் பங்கேற்றுள்ளனர்.

ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோவி லிலோ கிரகண நேரத்தில் நடை அடைக்கப்படு வதாக கோவில் நிர்வாகம் தகவல் வெளியிட் டுள்ளது. கிரணகத்தால் சர்வ சக்தி(?) கடவுளுக்கே ஆபத்தா? என்கிற கேள்வி எழுவது இயல்புதானே.

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளி யிட்டுள்ள தகவல் வருமாறு,

வருகிற 25 ஆம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25 ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், சிறீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வ தரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. அதன்படி திரு மலையில் உள்ள மாத்ருசிறீ தரிகொண்டா வெங்க மாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம்  வரிசை (கியூ) வளாகத்தில் அன்னபிரசாதம் வழங் கப்படாது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.

-இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இதைவிடவும் வேறு உதாரணம் வேண்டுமா?

No comments:

Post a Comment