தமிழ்நாடு அரசின் முயற்சியால் விளையாட்டில் சாதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

தமிழ்நாடு அரசின் முயற்சியால் விளையாட்டில் சாதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை,அக்.4- தேசிய விளை யாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் தமிழ்நாடு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித் துள்ளார். 36-ஆவது தேசிய விளை யாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் உள்ளிட்ட நகரங்களில் நடந்து வரும் போட்டிகளில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற் றுள்ளனர்.

தேசிய விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 380 வீரர்கள் அனுப்பப் பட்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவ்வளவு வீரர்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பியதில்லை. இதனால் தமிழ்நாடு வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு வீரர்கள் களத்திலும் அசத்தி வருகின்றனர். மகளிர் போல்வால்ட் பந்தயத்தில் தமிழ்நாடு வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் போல்வால்ட் பந்தயத்தில் தமிழ்நாடு வீராங்கனைகள் பவித்ரா வெள்ளி, பாரனிகா வெண்கலப்பதக்கம் வென் றனர். அதேபோல் மகளிர் 100மீ, ஓட்டத்தில் மதுரையைச் சேர்ந்த அர்ச்சனா வெள்ளி வென்று அசத்தினார்.

3ஆவது நாள் போட்டி முடிவில் தமிழ்நாடு 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண் கலம் என மொத்தம் 25 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், 4-ஆவது நாளான நேற்று தமிழ்நாட்டிற்கு மேலும் 8 பதக்கம் கிடைத்தது. இதனால் மொத்தமாக 12 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என்று மொத்தமாக 33 பதக்கங்களை வென்று தமிழ்நாடு அணி நான்காவது இடத்தில் உள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், தேசிய விளையாட்டு போட் டிக்கு தமிழ்நாடு சார்பில் 380 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளோம். 12 பதக்கங்களை வெற்றி பெற்று தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது. எங்கள் விளையாட்டு வீரர்கள் மேலும் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகிறேன். நமது விளையாட்டு சூப்பர் ஸ்டார் களை வரவேற்க காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment