பழங்குடி நலவாரிய உறுப்பினர் உதவித்தொகை உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

பழங்குடி நலவாரிய உறுப்பினர் உதவித்தொகை உயர்வு

சென்னை,அக்.28- பழங்குடி நலவாரிய உறுப்பினர்களுக்கான விபத்து, கல்வி உள்ளிட்ட நலத்திட்ட உதவித் தொகை களை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப் படும் நலத்திட்ட உதவித் தொகை, இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப் படும் என சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (27.10.2022) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், இதர நல வாரியங் களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், சுமார் 3,826 பயனாளிகள் பயன்பெறுவர். இதன் படி, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், இயற்கை மரணத் துக்கு ரூ.30 ஆயிரம், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழில் பட்டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழில் பட்ட மேற்படிப்புக்கு ரூ.6 ஆயிரம் என உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். அதேபோல, திருமண உதவித்தொகை ஆணுக்கு ரூ.3 ஆயிரம், பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும். மேலும், முதல்முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment