பருவமழை தொடக்கம்: பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

பருவமழை தொடக்கம்: பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை, அக். 12- பொதுப் பணிகள், நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச் சர் எ.வ.வேலு தலைமை யில்,  10.10.2022 அன்று தலைமைச் செயலகத்தில், பொதுப் பணித்துறையின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள், ஆகிய வற்றினை செயல்படுத்திய விவரம், நிலுவையிலுள்ள திட்டங்களை விரைவுப் படுத்த வேண்டியது தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோயம் புத்தூர் மண்டலம் மற் றும் மதுரை மண்டலம் ஆகிய இரண்டு மண்ட லங்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தினை தொடங்கி வைத்து அமைச் சர் வேலு பேசியதாவது:

பருவமழை தொடங்கி இருப்பதால், பள்ளிக் கட் டடங்கள், அரசு மருத் துவமனை கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை கட்டடங்களையும் ஆய்வு செய்து, மேற்கூரை யில் தண்ணீர் தேங்கா வண்ணம் சுத்தப்படுத்து தல், கட்டட வளாகங்க ளில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளி யேற்ற முன்னேற்பாடுகள் செய்து வடிகால்களை சீர்செய்தல், வலுவிழந்த மரங்கள், கிளைகளை வெட்டி அப்புறப்படுத்து தல் ஆகிய பணிகளை உடனடியாக மேற் கொள்ள வேண்டும்.

இடிக்கப்பட வேண் டிய பழைய பள்ளி கட் டடங்களை தாமதமின்றி உடனடியாக இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். பருவமழை தொடங்கும் நிலையில் உள்ளதால், பேரிடர் தொடர்பான விவரங் களை பெற்று உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்க மண்டல கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பின்னர் திருச்சி மண் டலம் மற்றும் சென்னை மண்டலம் அலுவலர் களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை அமைச்சர் தலைமையில் நடை பெற்றது. ஆய்வுக் கூட் டம் தொடங்கும் முன் பாக களப்பொறியாளர் கள் மற்றும் தரக்கட்டுப் பாட்டுப் பொறியாளர் கள் பொறுப்பில் நடை பெறும் “கட்டுமானம் பணிகளில் கண்காணிக் கப்பட வேண்டிய மிக முக்கியமான தரக்கட்டுப் பாட்டு அளவு கோல்கள் அனைத்தும் அடங்கிய கையேடு“ தயார் செய்யப் பட்டு அந்த கையேட்டை அமைச்சர் வெளியிட் டார்.

No comments:

Post a Comment