பாடப் புத்தகம் மட்டுமல்ல - சமூகக் கல்வியும் தேவை பெற்றோர்களுக்கு முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

பாடப் புத்தகம் மட்டுமல்ல - சமூகக் கல்வியும் தேவை பெற்றோர்களுக்கு முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்

சென்னை, அக்.16 காதலிக்க மறுத்ததால் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற கொடூரம் சென் னையில் நடந்தது. “இதுபோன்ற ஒரு துயரம் தமிழ்நாட்டில் எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்து இருக்கிறார். 

சென்னை புறநகர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது.  சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். அவருடைய மனைவி ராமலட்சுமி. ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில்தலைமைக் காவலராக வேலை பார்த்து வருகிறார். அவர்களுடைய மூத்த மகள் சத்யா (வயது 20) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். அவரது எதிர் வீட்டில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் சதீஷ் (23). இவருக்கும், மாணவி சத்யாவுக்கும் காதல் இருந்து வந்தது.   இந்த நிலையில் சதீஷின் நடவடிக்கைகள் சரி இல்லை என்பதை கூறி அவருடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளுமாறு மாணவி சத்யாவை, அவருடைய பெற் றோர் அறிவுறுத்தினார்கள். பெற் றோரின் அறிவுரையை கேட்டுக் கொண்ட சத்யா, அன்று முதல் சதீ ஷிடம் இருந்து விலகி வந்து இருக்கிறார். "என்னை மறந்து விடு, எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்" என்று அவரிடம் கூறி இருக்கிறார்.

இதனால் சதீஷ் விரக்தி அடைந்தார். கடந்த 13.10.2022 அன்று சென்னை புறநகரில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யாவை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு வருக்கும் வாக்குவாதம் முற்றவே, அந்த வழியாக வந்த மின்சார ரயில் முன் சத்யாவை காலால் உதைத்து தள்ளி கொடூரமாக கொன்றுவிட்டார்.   நெஞ்சை பதறவைக்கும் இந்த துயரச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.10.2022) உருக்கமாக பேசினார். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமை தொடங்கிவைத்த அவர், இதுபற்றிக் கூறியதாவது:- ஒரு முக்கியமான வேதனையான விட யத்தை இங்கு, நான் சொல்கிறேன். சென்னையில் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கிப் போயிருக்கிறேன். இதுபோன்ற சம் பவங்கள் இனி தமிழ்நாட்டில் நிகழக் கூடாது. இதுவல்ல நாம் காண விரும் பக்கூடிய சமூகம். இனி எந்த பெண் ணுக்கும் இதுபோல நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந் தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அறிவாற்றலிலும், தனித்திறமை யிலும், சமூக நோக்க மனப்பான்மை யிலும் சிறந்தவர்களாக அவர்களை பெற்றோர் வளர்க்க வேண்டும். பாடப் புத்தகக் கல்வி மட்டுமல்ல, சமூகக் கல்வியும் அவசியமானது. தன்னைப் போலவே பிற உயிரையும் மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்ட வர்களாக அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும்.   அவர்கள் எந்த வகையிலும் திசைமாறி சென்றுவிடாதபடி வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது. இயற்கையில் ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பெண்களை பாதுக்காக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்னமாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகளும், பெற்றோரும் சேர்ந்து இளைய சக்திகளை பாது காக்கும் வகையில் அவர்களை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment