தமிழ்நாட்டில் விண்வெளித்துறை மேம்பாடு! ஆறு புதிய ஒப்பந்தங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

தமிழ்நாட்டில் விண்வெளித்துறை மேம்பாடு! ஆறு புதிய ஒப்பந்தங்கள்

 சென்னை, அக்.27 விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண் டுள்ளது.   குஜராத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தட நிறுவனமும் பங்கேற்றது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்த இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி மற்றும் இந்த துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டம் குறித்தும் கண்காட்சி அரங்கில் விளக்கப்பட்டது. கருத்தரங்கு கண்காட்சியில் தமிழ்நாட்டின் சார்பில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயசிறீ முரளிதரன், கூடுதல் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரமோஸ் விண்வெளி மய்யத்தின் தலைமை செயல் அதிகாரி சிவதாணு பிள்ளை, இஸ்ரோ மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகி யோர் பங்கேற்றனர். 'விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சாதனங்கள் உற்பத்தியில் உலகளாவிய அளவில் முக்கிய இடத்தில் இருக்கும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.  விண்வெளி மற்றும் பாதுகாப் புத்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தவும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களுடன் தமிழ் நாடு அரசு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment