கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!

இன்றைய ‘தினமலரில்' (21.10.2022) பக்கம் 17 இல் ஆறு  பத்தியில் ஒரு செய்தி  - ‘‘அண்ணாதுரைபற்றி விமர்சனம்: பத்ரிசேஷாத்ரி நீக்கம்'' என்பது அதன் தலைப்பாகும்.

ஒன்றிய அரசின் இந்தி திணிப்புத் தொடர்பான சர்ச்சை ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வெடித்துக் கிளம்பியது.

‘டுவிட்டரில்' நடந்த விவாதம் ஒன்றில், பத்திரி கையாளர் என்.வினோத்குமார் என்பவர், ‘‘மூன்று மாதங்களில் ஹிந்தி கற்கலாம். அதற்குமேல் அந்த மொழியில் கற்பதற்கு ஒன்றுமில்லை என அண்ணாதுரை கூறியுள்ளார்'' என பதிவிட்டி ருந்தார்.

இந்தப் பதிலைப் பகிர்ந்த கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரிசேஷாத்ரி ‘‘இது அபத்தமான கருத்து. இதை அண்ணாதுரை சொல்லியிருந்தால், அவரையும் முட்டாள் என்றே சொல்லவேண்டும்'' எனக் கூறினார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடுமை யான விமர்சனங்களை பத்ரி சேஷாத்திரி சந்திக்க நேர்ந்தது.

இதற்குப் பிறகும் இந்தப் பத்ரி சேஷாத்ரி என்ன கூறியுள்ளார் என்பதுதான் முக்கியம்.

‘‘நான் தெரிவித்த கருத்து குறித்து, எனக்கு வருத்தமும் இல்லை; என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிர்த்தனமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்ணாவை விமர்சிக்கட்டும்; ஆனால், அந்த விமர்சனத்தில் திமிரும், ஆணவமும், பூணூல் புத்தியும் அல்லவா குதியாட்டம் போடுகிறது.

அறிஞர் அண்ணா, மக்கள் போற்றும் முக்கிய தலைவர். அத்தகைய தலைவர் குறித்து கருத்து சொல்லும்போது நிதானம் இருக்கவேண்டாமா?

தமிழர்கள் எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்கள் - கொந்தளித்து எழமாட்டார்கள் என்ற நினைப்பா?

‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

சில சுயமரியாதைப் பதிப்பகத்தினர் பத்ரி சேஷாத் திரியின் பதிப்பக நூல்களை விற்பதில்லை என்று வெளிப்படுத்தியுள்ளனர். ஹிந்தி புத்தகங் களையும், சமஸ்கிருத நூல்களையும் இந்தப் பூணூல் வெளி யிட்டு வியாபாரம் செய்யட்டுமே! யார் தடுத்தது?

No comments:

Post a Comment