பறிபோகும் வேலை வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

பறிபோகும் வேலை வாய்ப்பு

ஒசூர் கெலமங்கலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் அண்மையில் துவங்கப்பெற்று  பிளஸ்  2 படித்த இளம் பெண்களை பணியில் அமர்த்தி வருகிறார்கள்.ஒசூர் அதைசுற்றியுள்ள பகுதியில் இருந்து பணிக்கு போதுமான பணியாள்கள் கிடைக்க வில்லை என்று வடநாடான ஜார்க்கண்டில் இருந்து தனி ரயில் மூலம் 28.09.2022 அன்று ஒசூருக்கு அழைத்து வரப்பட்டு டாடா நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே  பல்வேறு துறையில் வடவர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் நிறைந்து வரும் சூழ்நிலையில் ஒரு நிர்வாகம் தனி ரயில் மூலம் ஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட வடநாட்டு பெண்களை அழைத்து வந்துள்ளது - தொழிலாளர் மத்தியில் தமிழ்நாட்டு இளைஞர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசு எப்படி பார்க்கிறது என்ற வினா எழுகிறது.தனக்கு தேவையான பணியாள்களை தமிழ்நாடு முழுவதும் டாட்டா நிறு வனம் தேடியதா என்ற வினாவையும் எழுப்புகிறார்கள்.

அதேவேளையில் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு டாடா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி டாடா நிர்வாகத்திற்கு தேவை யான பணியாள்கள் 90விழுக்காட்டை தமிழ்நாட்டு பெண் பணியாள்களைக் கொண்டே நிரப்பிட ஏற்பாடு செய்திட வேண்டும். அதற்கான ஆலோசனைகளை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு தொழி லாளர் துறையும் வழங்கிட வேண்டும். அப்படியில்லை என்றால் மற்ற நிறுவனங்களும் கொத்துக் கொத்தாக தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணி யாள்களை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டை வடவர் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்றும் அபாயம் உள்ளது.

- வனவேந்தன், ஒசூர்


No comments:

Post a Comment