மூடத்தனத்தின் முடைநாற்றம்: சூரிய கிரகணத்தின்போது இடுகாட்டில் பூஜையாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

மூடத்தனத்தின் முடைநாற்றம்: சூரிய கிரகணத்தின்போது இடுகாட்டில் பூஜையாம்!

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சட்ட விரோதமாக தோண்டி எடுக்கப்பட்டதா? சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்

மதுராந்தகம், அக்.27- மதுராந்தகம் அருகே மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல் சித்திரவாடி இடுகாட்டில் புதைக்கப்பட் டிருந்த நிலையில், இடுகாட்டில் பூஜை செய்து புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலில் இருந்து தலையை எடுத்துச் சென்ற நபர்களை, சித்தாமூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந் தகத்தை அடுத்த சித்திரவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (வயது12). 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையில் அவுரிமேடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது, கடந்த 5 ஆம் தேதி வீட்டு முன்பு உள்ள சாலையில் சிறுவர்களுடன் விளையா டிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியின் வார்டு உறுப்பினர் மூலம் மின் கம் பத்தில் பழுதடைந்திருந்த தெருமின் விளக்கை சரிசெய்ய முயன்றபோது, ஏற் கெனவே சேதமடைந்திருந்த மின்கம் பம் சாய்ந்து கீழே இருந்த சிறுமியின் மீது விழுந்து படுகாயமடைந்தார். இந் நிலையில் கடந்த 14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி கிருத்திகா உயிரிழந்தார். இதையடுத்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு கடந்த 15 ஆம் தேதி சித்திரவாடி பகுதி யில் உள்ள இடுகாட்டில் உடல் புதைக் கப்பட்டது.

சிதறிக்கிடந்த பூஜை பொருள்கள்

இந்நிலையில், 25.10.2022 அன்று சூரிய கிரகணம் நடைபெற்ற நிலையில் இடுகாட்டில் சிறுமியின் உடல் புதைக் கப்பட்டிருந்த இடத்தில் பூஜை செய்யப் பட்டிருப்பதை, நேற்று (26.10.2022) காலை அப்பகுதியாக சென்ற கிராமத் தினர் பார்த்துள்ளனர். மேலும், எலுமிச் சைபழம், மஞ்சள்தூள், குங்குமம் போன்ற பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் சிறுமி யின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சித்தாமூர் காவல்துறையினர் விரைந்து வந்தனர். இதையடுத்து, மதுராந்தகம் வட்டாட்சி யர் ராஜேஷ் தலைமையிலான வரு வாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரைப் பாண்டி, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் முன்னிலையில், சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப் பட்டது.

சிறுமியின் உடலிலிருந்த தலை எங்கே?

அப்போது, சிறுமியின் உடலில் தலை இல்லாததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். பின்னர், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மறு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத் தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தலையை எடுத்துச் சென்ற நபர்கள் குறித்து சித்தாமூர் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இடுகாட்டில் புதைக் கப்பட்ட உடலில் இருந்து தலை வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடவுள், மதம், பக்தியின் பெயரால் சாமியார்கள், குறிசொல்வோர், மந்திர வாதிகளின் மோசடிகள் மக்களை பெரி தும் அச்சத்துக்குள்ளாக்கி வருகின்றன. 

மக்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தும் அதே நேரத்தில் சட்டப்படி யான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத் தும்போது இதுபோன்ற மனிதநேயத் துக்கு எதிரான காட்டுவிலங்காண்டித் தனங்கள் ஒழியும். அறியாமை இருளில் மக்களை இட்டுச்செல்லும் மோசடிப் பேர்வழிகளை அடையாளம் கண்டு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மூடநம்பிக்கைகள் காரண மாக, பிணத்தை வைத்து பூஜை, நரபலி உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மூடநம்பிக்கை ஒழிப்புச்சட் டத்தின் தேவை அதிகரித்தபடி உள்ளது. 

No comments:

Post a Comment